ஒரு நல்ல மனிதன் சாகிறான் அல்லது தோல்வி அடைகிறான் , தீயவர்கள் வாழ்கிறார்கள் , வெற்றி பெறுகிறார்கள் என்பதால் கடவுளை தீயவன் என்று சொல்லிவிடலாமா ?
இந்த வாதம் எனக்குச் சரியாக தோன்றவில்லை . முதலில் சாவும் தோல்வியும் தீயவை என்பது நிச்சயமாக வேண்டும் . அவை வரும்போது , அந்த நேரத்திற்கு , அவையே நமக்கு மிகப் பெரிய நன்மையாகும் என்று நான் சில நேரங்களில் நினைத்ததுண்டு .
நமது இதயங்களும் நரம்புகளும் நம்மை முட்டாளாக்கும் . அதனால் அவை விரும்பாதவை , ஆசைப்படாத எல்லாம் கட்டாயம் தீயவையாகத்தான் இருக்க வேண்டும் என்று நாம் வாதிடுகிறோமே அது ஏன் ?
~ ஸ்ரீ அரவிந்தர் .
சில துரதிருஷ்டசாலிகள் ,
தாங்கள் செய்வதிலெல்லாம்
தோல்வியையே சந்திக்கிறார்களே
அது ஏன். ?
அன்னையே ,
அதிர்ஷ்டம் என்றும் துரதிருஷ்டம் என்றும் ஒன்று கிடையாது என்பதை முதலில் நீ சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொள்ள வேண்டும் .
நமது அறியாமையில் , நமக்கு அதிருஷ்டமாகத் தோன்றுவது , நமக்குத் தெரியாத காரணங்களினால் ஏற்பட்ட விளைவைத் தவிர வேறொன்றும் இல்லை .
ஒருவனுக்கு ஆசைகள் இருக்கும் போது , அவனுடைய ஆசைகள் நிறைவேறவில்லையென்றால் , அது அவனுக்கு ” இறைவனது அருள் “இருக்கிறது , அந்த அருள் , அனுபவத்தின் மூலம் , மனப்பூர்வமாக , இயல்பாக இறைவனது “
இச்சைக்கு ” சரணாகதி செய்வதே , எந்த ஆசையைத் திருப்தி செய்வதையும் விட , அமைதியிலும் அதன் ஒளியிலும் மகிழ்ச்சியோடிருப்பதற்கு , அதிக நிச்சயமான வழி என்று அவனுக்கு போதித்து, அவனை வேகமாக முன்னேறும் செய்ய விரும்புகின்றது என்பதற்கு அடையாளமாகும் .
~ ஸ்ரீ அன்னை ..










