ஆடிப்பூரம் விரதம் இருந்தால் கெட்டிமேளம் சத்தம் கேட்கும் பிள்ளை வரம் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார்.
ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
#ஆடிப்பூரவிரதம் #இருப்பதுஎப்படி..?
ஆடிப்பூரத்தன்று அம்பிகையை வழிபட விரும்புபவர்கள் காலையிலேயே எழுந்து நீராடி தூய உடை அணிந்து விரதம் இருந்து அம்பாளுக்கு உகந்த பால்பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
ஆலயம் சென்று தொழமுடியாத காரணத்தால் வீட்டிலேயே அம்பாள் படத்துக்கு மலர்கள் சாத்தி வழிபடலாம். அம்பாளுக்கு உரிய லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து நெய் விளக்கேற்றி வழிபடலாம்.
இந்த நாளில் அன்னைக்கு வளையல் சமர்ப்பித்து வழிபடுவது வழக்கம். எனவே, அன்னைக்கு என்று புதிய வளையல்களை எடுத்துப் பூஜை அறையில் வைத்துப் பின் யாரேனும் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வழங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் வறுமைகள் நீங்கும்.
மேலும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கட்டாயம் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.











