மகாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும். சிவ பெருமானை மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது.
பன்மடங்காய் பலன்தரும் அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும். மகா வில்வமானது நடராஜ் பெருமான் நாட்டியத்தில் உத்திர நட்சத்திர நாளில் அபிஜத் முகூர்த்தம்,பிரம்ம முகூர்த்தம் போன்ற பன்னிரு முகூர்த்தங்களில் ஒவ்வொரு வில்வ இலையாக உண்டானது.
இதன் ஆதி மூலத்தை சிதம்பரத்தில் சிதம்பர ரகசியத்தின் ஒரு அங்கமாய் உள்ள சுவர்ண வில்வ மாலையாக தரிசிக்கலாம். மகா வில்வத்தின் இலைகளை அதிகமாகப் பறித்தல் கூடாது. மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம்.
ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூஜைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.











