• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா சுவாமிகள் 53-ஆம் ஆண்டு குருபூஜை

siddharbhoomi by siddharbhoomi
January 3, 2023
in சித்தர்கள்
0
சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா சுவாமிகள் 53-ஆம் ஆண்டு குருபூஜை
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

இரசமணி சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா சுவாமிகள் 53-ஆம் ஆண்டு குருபூஜை விழா

நாளை 04.01.2023 புதன்கிழமை💥

🌹🍀🌹🍀🍀🌹🍀🌹

🏵️ குறிப்பு: 03.01.2023 விழா இன்று ஆரம்பம்

நாளை :04.01‌2023 புதன்

நாளை மறுநாள்:05.01.2023 வியாழன்

ஆகிய மூன்று நாட்கள் விழா நடைபெறும்

“எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறான். ஞானிகளின்

உள்ளங்களிலும், திருக்கோவில்களிலும் சிறந்து விளங்கி காட்சியளிக்கிறான்.

எல்லா இடங்களிலும் இறைவனை நினைத்து தியானிப்பதாலும், துதிப்பதாலும்,

வழிபடுவதாலும்  வினைகள் அகலுகின்றன. கோவில்களிலும், ஞானிகளின் ஜீவ

சமாதிகளிலும் நாம் வழிபட்டால் நம் வினைகள் எரிந்து, கரைந்து, நீராகி

விடுகின்றன”.

 மேற்குறித்தத் திரு வாக்கினை உரைத்தவர் இரசமணி சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர

பட்டா சுவாமிகள் ஆவார்கள். யோகிகளும், சித்தர்களும் உலகில் வாழ்வதற்காக

அவதாரம் செய்வதில்லை; உலக மக்களை வாழ்விப்பதற்காகவே பிறக்கின்றனர்.

இவர்கள் என்றென்றும் அழியாத நித்திய சக்தியாகவே விளங்குகின்றனர். சித்தர்கள்

இறையருளால் தோன்றி மக்களை உய்விக்கவென்றே தோன்றியவர்கள்.

ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா சுவாமிகள் ஆந்திர மாநிலத்தில் கோலிரி மாவட்டத்தில்

திராஹரா புண்ணிய க்ஷேத்திரத்தினருகில்  ஈஸ்வர மங்கலத்தில் நாராயண பட் –

பர்வதம்மா எனும் பிராமணத் தம்பதியருக்கு மகனாகத் தோன்றினார்.

728x90 அதிசயப் பனம்பழம்:-

சுவாமிகள் குழந்தைப் பருவம் முதலே அருள் சக்தியும்,ஞான சக்தியும் மேவிட

தெய்வீகத்தன்மை பொருந்திய தோற்றத்துடனும் வளர்ந்து வரலானார். குழந்தைப்

பருவத்தில் சிறுவர்களோடு சேர்ந்து கோதாவரி நதிக்கரையில் குளிக்கச்

சென்றவர்கள் ஆற்றின் கரையில் இருந்த பனந் தோப்புக்குள் புகுந்தனர்.

அவ்வேளையில் ஒரு பனை மரத்திலிருந்து தானாகவே பனம் பழங்கள் சில

உதிர்ந்து விழுந்தன.

சிறுவர்கள் தத்தமக்கு ஒவ்வொரு பழத்தை எடுத்துக் கொண்டு வரப்

பட்டாவிடத்தும் ஒரு பழத்தைக் கொடுக்க அப்பழத்தை உண்ண முற்படுகையில்

அப் பனம்பழத்திலிருந்து ஓங்கார நாதம் எழுந்தது. ஒலி கேட்டு உடனிருந்தவர்கள்

அஞ்சி நடுங்கி மறைந்து நின்றனர்.

Banner 2

அவ்வேளையில் ஈஸ்வரபட்டா கையிலிருந்த பனம்பழம்  வெடித்து அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றி சிவலிங்கம் வெடித்து அதனுள் இருந்து தெய்வீக ஒளி மிக்க ஒரு மனித உருவம் தோன்றி ஈஸ்வர பட்டாவைத் தன்னருகே பத்மாசனத்தில் அமரும்படி உரைத்தார்.

ஈஸ்வர பட்டா அஞ்சி நடுங்கி அவ்விதமே அமர்ந்ததும் அவரது புருவமத்தியைத் தன் நடுவிரலால் தடவி விட தன் நிலை இழந்தவராக இரு விழிகளையும் மூடிக்கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து மோன நிலையில் பேச்சற்று அமர்ந்துவிட்டார்.

உடன் வந்த சிறுவர்கள்  அவரது மோனநிலையைக் கலைக்க முயற்சித்து முடியாமல் போகவே அவரை தூக்கித் சென்று ஆற்றில்  போட்டனர். அப்போதும் ஈஸ்வர பட்டாவிற்கு உணர்வு வராது போகவே மீண்டும் அவரைக் கரையில் போட்டுவிட்டு ஊருக்குள் சென்று உரைத்தனர்.

மக்கள் ஓடி வந்து பார்க்கையில் ஆலமரத்தடியில் அதே மோனநிலையில் அமர்ந்திருக்கக் கண்டு மல்லண்ணா என்பவன் நெற்றியில் பெரிய தடிகொண்டு தாக்கவே

980*120 சுவாமிகள் உணர்வு வந்தவராய் சுற்றுமுற்றும் நோக்கி விட்டு ஒரு சிறு துணியை மட்டும் வாங்கி கட்டிக்கொண்டு உடுத்திருந்த உடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு திண்ணையில் அமர்ந்தவாறு தவத்தைத் தொடர்ந்தவருக்கு இரவானதும் மீண்டும் ஓங்கார ஒலி ஆற்றங்கரையில் இருந்து அழைக்கவே மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே வந்து அமர்ந்து யோகத்தைத் தொடரலானார்.

சுவாமிகள் ஆற்றங்கரையில் தவமிருக்க பற்பல இடையூறுகள் தொடர்ந்த நிலையிலும் தன் யோகத்தை மோன நிலையில் தொடர்ந்தபடியே அமர்ந்திருந்தார்.

12 ஆண்டுகள் இடைவிடாத தியானத்தாலும், யோகத்தாலும் தெய்வீக சக்திகள் கைவரப் பெற்று பரிபூரணமான நிலையில் தவ முயற்சியால்  பற்பல அற்புதங்களை மக்களிடையே செய்து வந்தார்.

 குருவும், சீடரும்:-

💥🌺💥🌺💥🌺💥

பழனியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்குத் தீராத வயிற்று வலி நெடுங்காலமாக இருந்து வந்தது. ஈஸ்வர பட்டா சுவாமிகள் பழனி மலை அடிவாரத்தில் நின்றிருந்த நடராஜரைப் பெயர் சொல்லி அழைத்து, “உன் வயிற்றுவலி குணமாக உன் வலது கையை நீட்டு” என்று சொல்லி அவரது ஆள்காட்டி விரலை நீவி விட வயிற்றுவலி நிரந்தரமாகத் தீர்ந்து போனது.

அதுமுதல் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா சுவாமிகளைக் குருவாகக் கொண்டு அவருக்கு சீடராகி தன் வீட்டுக்கு சுவாமிகளை அழைத்துச் சென்று வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார்.

 அற்புதங்கள்:-

🌸☘️🌸☘️🌸☘️

நடராஜ சுவாமிகளின்  தாயாரும், மனைவியும் ஈஸ்வர பட்டா சுவாமிகளுக்கு உணவளித்துப் பணிவிடை செய்து வந்தனர். ஒருமுறை சுவாமிகள் சீடரின் வீட்டில் ஹோம குண்டம் அமைத்து ஹோமம் செய்த போது நடராஜ சுவாமிகளின் தாயாரது கிழங்கு விற்கும் சாக்குப்பைகளை ஹோமத்தில் இட்டு எரித்து விடவே பதறிப் போன தாயம்மாளுக்கு எரியும் ஹோமத்தீக்குள் கையை விட்டு 10 சாக்குப் பைகளையும், சுருக்குப் பையில் வைத்திருந்த வெற்றிலை – பாக்கையும், 120 ரூபாய் பணத்தையும் எடுத்துத் தந்தார்.

மற்றொரு முறை நடராஜ சுவாமிகள் வீட்டின் முன் இருந்த மிகப்பெரிய விறகுக் கட்டையைக் காணாது தேடவே அதனைக் கொண்டு “உலக நலத்திற்காக ஸ்ரீராமன் காலத்தில் நடத்தப்பட்ட  ஹோமத்தைச் செய்வதாகக்” கூறி, அதனை சீடர் நடராஜருக்குக் கற்றுக்கொடுத்தார்.

 * ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகள் சீடர் நடராஜரது இல்லத்துக்குச் சென்றது முதல் வீட்டின் நடுவிலேயே மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனைக் கண்டு நடராஜ சுவாமிகளின் தாயும், மனைவியும் முகம் சுழிக்க ஒரு பீங்கான் பாத்திரம் கொடுத்து அதில் மலம் கழிக்கச் செய்து அப்பாத்திரத்தை நடராஜ சுவாமிகள் சுத்தம் செய்து வந்தார்.

ஒருநாள் அப்பாத்திரத்தைச் சுத்தம் செய்ய எடுத்துச் சென்றபோது இனிய நறுமணம் மலத்திலிருந்து வீசவே தாயாருக்கும், மனைவிக்கும் அதனைக் காட்டி அதிசயித்தார்.”சீடரது  சகிப்புத் தன்மையை பரிசோதிக்கவே இச் சோதனை செய்தோம்” என்று குரு நாதர் வாய்மொழி பகர்ந்தார்.

இவ்விதம் எண்ணிலடங்கா சித்துக்கள் புரிந்து வந்த ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகள் தான் தேர்ந்தெடுத்த சீடர் ஸ்ரீநடராஜ சுவாமிகளுக்கு பற்பல மந்திர- தந்திர பூசனைகள் செய்வது, தகடு,தாயத்து இவைகளை மக்களுக்கு வழங்கி அவர்களின் குறைகளைத் தீர்க்கும் முறைகளைக் கற்றுக்கொடுத்தார்.

*பறக்கும் கம்பளம்:-

🍄🍄🍄🍄🍄🍄🍄🍄

ஒருமுறை ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகள் சீடர் நடராஜருடனும், அவரது நண்பர்களுடனும் திருமூர்த்தி மலைக்குச் சென்றிருந்தபோது தென்னை மரம் தானே வளைந்து வந்து இளநீரைத் தந்து சென்றது. பின்னர் அங்கிருந்து பறக்கும் கம்பளத்தின் மீதமர்ந்து பழனி மலைக்கு  வந்து சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கதொரு  அதிசய நிகழ்வாகும்.

ரசமணி:-

 

ஒரு நாள் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா சுவாமிகள் நள்ளிரவில் தேவர்களுடன் ஹோமம் வளர்க்கும் காட்சியைக் கண்ட சீடர் நடராஜ சுவாமிகள் அச்சப் பட, அவருக்கு ரசமணி மாலை அணிவித்து  ரசமணியின் பெருமைகளை எடுத்துச் சொல்லி ரசமணி கட்டுவதைப் போதித்து ரசமணி சித்தராக ஆக்கினார்.

ரசவாதம்:-

🌼🍂🌼🍂 இரும்பு,செம்பு,ஈயம் முதலான உலோகங்களைக் கொண்டு பொன், வெள்ளி முதலிய உயரிய உலோகங்களாக ரச வாதத்தின் மூலம்  மாற்றிக் காட்டியதைப்  பார்த்துக் கொண்டிருந்த சந்துரு ஐயர் என்பவர் அப்பொருட்களைச் சேகரித்து தாமும் அவ்வாறே ரசவாதம் செய்ய ஆரம்பிக்க அவரது கண்கள் ஒளி இழந்தன.

கண்ணொளி வராத நிலையில் ஈஸ்வர பட்டா சுவாமிகளிடம் வந்து பிழையைப் பொறுத்து மன்னித்து அருளிட வேண்டி நிற்க, சுவாமிகள் தண்ணீரைக் கொண்டு அவர் கண்களில் ஒளி தந்தார்கள்.

ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா  சுவாமிகள் பெருந்தன்மை மிக்க ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவரிடமும் அன்பைப் பொழியும் உயரிய நற்குணங்களைப் பெற்றிருந்தார். தீராத நோய்களைத் தன் பார்வையாலேயே அகற்றும் தன்மை கொண்டிருந்தார்கள். ஒரு இடத்திலிருந்து மறைந்து மறுபடியும் தோன்றுவார்.

எளிமையும் அன்பும் நிறைந்த சுவாமிகள் இதற்குமுன் 59 பிறவிகள் வாழ்ந்து 59 இடங்களில் சமாதி ஆகி உள்ளார்கள். பழனியில் உள்ள சமாதி சுவாமிகளின் அறுபதாவது சமாதியாகும் . வாழ்நாள் முழுவதும் சித்துக்கள் புரிந்து

வந்த சுவாமிகள் தன்னிடம் இருந்த அனைத்து சக்திகளையும், ஆற்றல்களையும் தனது சீடரான ஸ்ரீநடராஜ ஸ்வாமிகளுக்கு அருளிச்செய்து 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் விசாகம் நட்சத்திர நாளில் சமாதி அடைந்தார்கள்.போகர்,

புலிபாணி சித்தர்களை ஜீவ முக்தி அளித்து தன்னோடே வைத்துக் கொண்ட பழனி தண்டபாணித் தெய்வம் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகளையும் தனக்கு உகந்த நட்சத்திர நாளில் ஒன்றிணையச் செய்தது கந்தனின் அருள் அன்றோ!

ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா சுவாமிகளின் ஜீவசமாதி இடும்பன் மலை – பழனி மலை இடையில் அமைந்துள்ளது.

சமாதி பீடம்:-

🌻🌻🌻🌻🌻

728*90 ES V.2 சுவாமிகள்

பொதிகை மலை வழியாக வந்து முருகப்பெருமானை வணங்கியதால் ஷண்முகலிங்கம் எனும் திருநாமம் கொண்ட சிவலிங்கத்தைச் சமாதி பீடத்தின் மீது பிரதிஷ்டை செய்து ஜீவசமாதி மேடையின்  மேற்புறம் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது.

பௌர்ணமி நாளில் கடலில் தோன்றும் அலைகள் போல் சமாதி பீடத்தில் நிறைந்துள்ள மணல் பொங்கி மேலெழும்பும் என்பது அதிசயத்தக்க நிகழ்வாகும். தரை மட்டத்திலிருந்து தற்போது சமாதி பீடம் முழுவதும் நிறைவடையும் நிலையில் பொங்கி நிறைந்துள்ளது.

 தியானம்:-

💥💥💥💥💥

ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகள் பல இடங்களில் தியானமும்,தவமும் செய்தவராவார். பழனி அருகில்  உள்ள  திருமூர்த்திமலை, குமரலிங்கம்,கொழுமம், ஐவர் மலை ஆகியவை முக்கியத் திருத்தலங்களாகும்

250*250  பூஜைகள்:-

🌸🍃🌸🍃🌸

* அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகளையும், வெள்ளிக்கிழமைகளில் அருள்வாக்கு உரைப்பதும் ஜீவசமாதி பீடத்தில் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகளின் சீடர் ஸ்ரீநடராஜ சுவாமிகளின் மகனான குட்டி ஈஸ்வர பட்டா தொடர்ந்து திறம்பட நிகழ்த்தி வருகிறார்.

 

குரு பூஜை:-

🍁☘️🍁☘️🍁

ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டா சச்சிதானந்த சுவாமிகளின் 53வது மகா குருபூஜை ஜனவரி 3, 4, 5 தேதிகளில் 3 நாட்கள் விழாவாக நடைபெறுகிறது.

03.01.2023 செவ்வாய் அன்று கொடியேற்றமும்  04.01.2023 புதன்கிழமை அன்று காலை 4:00  மகா யாகங்களும், பூஜைகளும் அன்னதானமும் நடைபெறும்.  05.01. 2023 வியாழக்கிழமை மறுபூஜையுடன் நிறைவடையும்.

Previous Post

பலி பீடம்

Next Post

புதன்கிழமை பிரதோஷ நன்மைகள்

Next Post
புதன்கிழமை பிரதோஷ நன்மைகள்

புதன்கிழமை பிரதோஷ நன்மைகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »