• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கோடி லிங்கேஸ்வரர் கோயில்

siddharbhoomi by siddharbhoomi
December 18, 2023
in கோயில்கள்
0
கோடி லிங்கேஸ்வரர் கோயில்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கோடி லிங்கேஸ்வரர் கோயில்

அக்கோயில்களில் எல்லாம் வைத்து மிகப்பெரிய சிவலிங்கத்தை கொண்டிருக்கும் கோயிலானது கர்னாடக

மாநிலத்தில் அமைந்துள்ளது. அதோடு அதிக அளவிலான சிவலிங்கங்கள் இருக்கும் கோயில் என்ற சிறப்பையும்

பெற்றிருக்கும் அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கர்னாட மாநிலத்தில் தங்க சுரங்கத்திற்கு புகழ்பெற்ற கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற ஊரில்

அமைந்திருக்கிறதுகோடி லிங்கேஸ்வரர் கோயில். இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம்

இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்பதோடு மட்டுமில்லாமல் இக்கோயிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட

ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோயிலுக்குகோடி லிங்கேஸ்வரர்

கோயில் என்ற பெயர் வந்துள்ளது.

கோயில் வரலாறு:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலானது 1980ஆம் ஆண்டு சுவாமி சாம்ப சிவ மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்டு முதல் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிவலிங்கங்களை பிரதிர்ஷ்டை செய்ததன் விளைவே கோடிலிங்கங்கள் சேரக்காரணம் ஆகும்.

கோயில் அமைப்பு:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் 108அடி உயரமுடைய சிவலிங்கமும் அதற்கு நேர் எதிராக 35அடி உயரம் கொண்ட நந்தியும் இருக்கிறது. மேலும் இக்கோயில் வளாகத்தினுள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர், கன்னிகாபரமேஸ்வரி, கருமாரியம்மன் ஆகிய கடவுளர் சந்நிதிகள் உள்ளன.

கன்னிகாபரமேஸ்வரி கோயில்:

கோடிலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் இருக்கும் கன்னிகாபரமேஸ்வரி சந்நிதியினுள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை சுற்றிலும் விநாயகர், முருகர், பார்வதி மற்றும் நந்தி ஆகியவர்கள் நின்று வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.

திருமண வரம் தரும் கோயில்:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இரண்டு நாகலிங்க மலர் மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டியும் சிவபெருமானை மனதுருகி வேண்டி நாகலிங்க மரத்தில் மஞ்சள் கயிறை கட்டிச்செல்கின்றனர்.

பூசை நேரம்:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை மற்றும் மாலை ஆறு மணிக்கு 10 பூசாரிகளால் மேளவாத்தியங்கள் முழங்க பூசைகள் செய்யப்படுகின்றன.

பக்தர்களின் லிங்க பிரதிர்ஷ்டை வழிபாடு:

இக்கோயிலில் ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறை இருக்கிறது. தங்கள் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவ லிங்கத்தை இக்கோயில் வளாகத்தில் பிரதிர்ஷ்டை செய்கின்றனர். இந்த லிங்கங்கள் பக்தர்களின் பெயரிலேயே பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

சிறப்பு வசதிகள்:

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ஏதுவாக இலவச ஓய்வறைகள் கோடிலிங்கேஸ்வரர் கோயிலை ஒட்டியே இருக்கிறது. ஏழைகள் பயனுறும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள் 15-20 ஜோடிகளுக்கு இக்கோயிலின் நிறுவனரான சுவாமி சாம்ப சிவ மூர்த்தியால் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

எங்கே அமைந்திருக்கிறது?

கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. பெங்களூரில் இருந்து கோலார்-பங்கார்பெட்டை வழியாக இக்கோயிலை அடையலாம்.

 

Previous Post

2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு!

Next Post

போகி பண்டிகை

Next Post
போகி பண்டிகை

போகி பண்டிகை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »