கோவில் கும்பாபிஷேகம், குலதெய்வ கோவில் திருவிழா இதற்கெல்லாம் செல்ல
முடியாதவர்கள் இதை செய்தால் போதும் தெய்வம் உங்கள் வீடு தேடி வந்து
ஆசீர்வதிக்கும்.
ஆயிரம் திருமணம் கூட பார்த்து விடலாம். ஆனால் ஒரு கும்பாபிஷேகம் பார்க்க
முடியாது என்று சொல்லுவர்கள்.
கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க அவ்வளவு கொடுப்பினை வேண்டும். அது
போல எல்லோருக்கும் குலதெய்வம் நிச்சயமாக இருக்கும். அந்த கோவில்களில்
திருவிழாக்கள், விசேஷங்கள் என்று நடக்கும்.
சில கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறை வெகு விமர்சையாக இந்த
திருவிழாக்களை கொண்டாடுவார்கள். இந்த இரண்டிலும் நாம் கண்டிப்பாக கலந்து
கொள்ள வேண்டும். ஆனால் சில நேரங்களில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை
ஏற்பட்டு விடும்.
அது போன்ற சமயங்களில் இந்த ஒரு சின்ன வழிபாட்டை நம் வீட்டில் செய்தால்
கும்பாபிஷேகம், குலதெய்வ திருவிழா இவற்றில் கலந்து கொண்டதற்கான முழு
பலனும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய கொடுப்பினை கிடைப்பது பெரிய
விஷயம். எத்தனையோ பேர் குலதெய்வம் தெரியாமல் இருக்கிறார்கள். தெரிந்தும்
செல்ல முடியாமல் இருக்கிறார்கள்.
சிலருக்கு வெகு தொலைவில் இருக்கும் அல்லது அவர்கள் வெளிநாட்டில் இருப்பார்கள் இது போன்ற சமயங்களில் அங்கு நடக்கும் பூஜைகளிலோ, திருவிழாவில் கலந்து கொள்ள முடியாது.
அதே போல் பிரசித்தி பெற்ற கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகத்தையும் நேரில் பார்க்கும் யோகம் அனைவருக்கும் கிடைக்காது. அந்த நேரத்தில் உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு சிறிய வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். நேரில் சென்று தரிசனம் செய்தற்கான முழு பலனை பெறலாம்.
கும்பாபிஷேகம், குலதெய்வ வழிபாடு இதையெல்லாம் உங்களுக்கு எப்படியும் முன்கூட்டியே தெரிந்து விடும்.
நாளை நடக்கப் போகிறது என்றால் இன்று வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறைகளை சுத்தம் செய்து படங்களுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து என அனைத்து பூஜை வேலைகளும் முடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நல்லது.
திருவிழா, கும்பாபிஷேகம் நடக்கும் இந்த நாட்களில் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீட்டில் விளக்கு ஏற்றி ஒரு வழிபாடு செய்து விடுங்கள்.
அதன் பிறகு குலதெய்வ கோவில் திருவிழாவாக இருந்தால் அந்த தெய்வத்திற்கு என்ன செய்து படைப்பீர்களோ அதை செய்து கொள்ளுங்கள்.
வேறு கோவில் விசேஷங்கள், கும்பாபிஷேகம் ஆக இருந்தால் ஏதாவது ஒரு நெய்வேத்தியம் செய்து கொள்ளுங்கள்.
வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றையெல்லாம் வைத்து அங்கு பூஜை நடக்கும் வேளை அல்லது கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் எந்த தெய்வத்திற்கு நடக்கிறதோ அந்த தெய்வத்தின் திருவுருவ படத்திற்கு மாலை போட்டு இந்த நெய்வேத்தியங்களை படைத்து வழிபாடு செய்யுங்கள்.
இதில் முக்கியமான ஒன்று எந்த தெய்வத்திற்கான வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வத்திற்கான திருவுருவப்படம் நிச்சயமாக இருக்க வேண்டும்.
இதற்கு முன் இல்லை என்றாலும், இப்படி வணங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அந்த தெய்வத்தின் திருவுருவப்படத்தை வாங்கி வைத்துக் கொண்டு வணங்குதல் வேண்டும்.
அங்கு பூஜை நடக்கும் வேளையில் உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்த திருவுருவப்படத்திற்கு முன் அமர்ந்து மனதார அந்த தெய்வத்தின் உருவத்தை மனதில் கொண்டு வந்து உங்களில் வேண்டுதல்கள் குறைகளை அவர்களிடம் சொல்லுங்கள். கண்டிப்பாக உங்களின் வேண்டுதலுக்கு அவர்கள் செவி சாய்த்து உங்களுக்கு அருள் புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதை செய்த பிறகு நிச்சயமாக அந்த நாளில் யாரேனும் ஒருவருக்கு நாம் அன்னதானம் செய்ய வேண்டும். இது தெய்வத்திற்கு நேரடியாக நாம் செய்யும் பலனை கொடுக்கும். அதை செய்த பிறகு நீங்கள் வந்து வீட்டில் இருக்கும் நெய்வேத்திய உணவை சாப்பிடலாம்.
இது மிக மிக எளிய வழிபாடு தான் தவிர்க்க முடியாத காரணத்தினால் அங்கு செல்ல முடியாதவர்கள் மட்டும் இந்த வழிபாட்டை அன்றைய தினம் செய்து கொள்ளுங்கள். செல்ல வாய்ப்பு இருப்பவர்கள் கட்டாயமாக சென்று வழிபடுங்கள் அது மிகவும் சிறப்பு.











