ஒகேனக்கலில் தவமியற்றித் திரும்பிய படைப்புக்கடவுள் ஸ்ரீபிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவர் பெயரில் லட்சுமி இருந்தாலும், சாட்சாத் உக்கிர நரசிம்மர்தான். நரசிம்மருள் தாயாரும்
அடக்கம். எனவேதான், லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். தாயாருக்குச் செய்யப்படும் மஞ்சள் மற்றும் குங்கும அபிஷேகமும் பெருமாளுக்கே செய்யப்படுகிறது.
நரசிம்மர் அஷ்டபுஜங்களுடன் காட்சியளிக்கிறார். மடியில் இரண்யனைக் கிடத்தி ஒரு கையால் அரக்கனது தலையையும் ஒரு கையால் கால்களையும் அழுத்திப் பிடித்துள்ளார். இரு கைகளால் அவன் வயிற்றைக் கிழிக்கிறார்.
இரு கைகளால் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறார். இரு கைகளில் சங்கும் சக்கரமும் துலங்குகின்றன. அருகே பாலகன் பிரகலாதன் நிற்கிறார். பக்த ரட்சகரான நரசிம்மரிடம் நாளை என்பதே இல்லை’ .
நரசிம்ம ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கோவில் வளாகத்தில் ஸ்ரீ.ராமசந்திரமூர்த்தி மற்றும் ஸ்ரீ.ஆஞ்சநேயருக்கும் தனி
சந்நதிகள் உள்ளது.
செல்லும் வழி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ.. ஷேர் ஆட்டோ வசதி உண்டு.









