“சொர்கத்தையும் நரகத்தையும் தீர்மானிப்பது நாம்”
ஒரே செயல் இருவகை எண்ணங்கள் நீங்க நல்லவரா? கெட்டவரா?
ஒரு தெருவில் பிச்சை கேட்டு பிச்சைக்காரன் வந்து கொண்டிருந்தான்.
ஒரு வீட்டுக்குள்ளிருந்து ஒரு அம்மா குழந்தையோடு வந்தாள்.
தன் குழந்தை கையில் கொடுத்து அரிசியைப் பிச்சை போடச் சொன்னாள்.
அதை வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்கு வாசலில் வந்து நின்றான் பிச்சைக்காரன்.
அடுத்த வீட்டுப் பெண்ணும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தன் குழந்தையைக் கூப்பிட்டு அந்தக் குழந்தை கையால் பிச்சை போடச் செய்தாள்.
கொஞ்ச காலம் கழித்து இரு பெண்களும் இறந்து மேல் உலகம் போனார்கள்.
முதல் பெண்ணை சொர்க்கத்திற்கும் இரண்டாவது பெண்ணை நரகத்திற்கும் அனுப்ப சொன்னார் நீதி தேவன்..!
இரண்டாவது பெண் “என்னை மட்டும் ஏன் நரகத்திற்கு போகச் சொல்கிறீர்கள்? அந்தப்பெண் குழந்தையிடம் கொடுத்து தர்மம் செய்த மாதிரி தானே நானும் செய்தேன்”? என்று சண்டை போட்டாள்.
அதற்கு நீதிதேவன் சொன்னார்: “நீங்கள் இருவருமே குழந்தையால் பிச்சையிட்டாலும், உங்கள் இருவரின் நினைப்பும் வேறு மாதிரி இருந்தது. அந்த பெண் “குழந்தையால் பிச்சை போட்டு அந்தப் புண்ணியம் நம் குழந்தைக்குக் கிடைக்கட்டுமே” என்று நினைத்தாள்.அதனால் அவளுக்கு சொர்க்கம்.
ஆனால் நீ உன் கையால் பிச்சை போட்டால் அதிக அரிசி போய் விடுமே என்று நினைத்து குழந்தை கையால் பிச்சை போட்டாய். உனக்குக் கேட்ட எண்ணம் இருந்ததால் புண்ணியம் கிடைக்கவில்லை” என்றார்.
எந்த செயலிலும் நன்மையை மட்டுமே நினையுங்கள். பிறருக்கு தீமை தரும் எதையும் சிந்திக்காதீர்கள். செயல்படுத்தாதீர்கள்.
#Delhi to #Muscat Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
எண்ணங்களே செயல்களாக மாறும். செயல்களே நம் குணாதிசியங்களையும், தகுதியையும் நிர்ணயிக்கும். தகுதியே நாம் வாழும் சமூகத்தில் அங்கீகாரத்தை ஏற்படுத்தும். அங்கீகாரமே நம்மை அடையாளப்படுத்தும்.
இவை அனைத்தையும் அடிப்படையில் தீர்மானிப்பது நமது எண்ணங்களே,அதை நெறிப்படுத்தி முறையாக கையாண்டால் நாம் சொர்கத்திலும் வாழலாம், இல்லை நரகத்திலும் வீழலாம்.










