• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சதுரகிரி போகலாம் வாங்க!

siddharbhoomi by siddharbhoomi
February 25, 2021
in சித்தர்கள்
0
Everything is God
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சதுரகிரி போகலாம் வாங்க!

நவகோடி சித்தர்கள் தவமியற்றும் சதுரகிரி போகலாம் வாங்க!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிப்பு அருகே…மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, 64

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில், 18 சித்தர்களும்

ஒன்றாக வாழ்ந்து வழிபட்ட, தென்னிந்தியாவின் புகழ் பெற்ற சதுரகிரி மலையில்

அமைந்துள்ளது,

சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில். அடிவாரமான தாணிப்பான்ற மூலிகை

வனத்திலிருந்து கரடு முரடான பாதையில் பயணித்தே மகாலிங்கத்தை தரிசிக்க

முடியும்.சதுரகிரிக்கு, சதுரகிரியின் மலை பயணத்திற்கு, அனுபவத்திற்கு சித்தர்கள் வழி

காட்டுகின்றனர்.

கோரக்கர் சித்தர் தனது மலை வாகடம் நூலில் கூறியுள்ள வழியிலே, இன்றும் பயணம்

செய்யப்படுவது ஆச்சிரியம் தான்.10 கி.மீ நடை பயணத்தை தாணிப் பாறையில் துவங்கினால்,

முதலில் ஆசீர்வாதம் தரும் தும்பிக்கை விநாயகரையும், தங்க காளியம்மனையும்

தரிசிக்கலாம். இவை பிற்கால கோயில்கள். சற்று தூரத்தில் வருவது,

காற்றையே ஆடையாக அணிந்த காலங்கி நாதரால் பிரதிட்டை செய்யப்பட்ட கருப்பண்ணசாமி

கோயில். சப்த கன்னிகளுடனும் பேச்சியம்மனுடனும் சதுரகிரி முழுவதையும் காக்கும் காவல்

தெய்வம், கருப்பண்ணசாமி.

அங்கிருந்து சிறிது தூரத்தில் குதிரை ஊத்தும், குதிரை குத்திப் பாறையும் அக்காலத்தில் ராஜாக்களும் ஜமீன்தார்களும், அவர்களின் குதிரைகளும் இளைப்பாறும் இடம். இந்த இடத்தில், வேகமாக ஓடி வரும் குதிரைகள் தடுமாறி…

இங்குள்ள பாறைகளில் மோதிக் கொண்டு விழுவதல் இந்த இடத்திற்கு குதிரை குத்தி பாறை என்று வந்ததாம். அந்த பள்ளத்தில் இறங்கி ஏறினால், சற்று தொலைவில் மாங்கனி ஊத்து. தண்ணீர் இருந்தால் குளிக்கலாம்.

அங்கிருந்து இறக்கமான பாதையில் ஒரு கி.மீ நடந்தால், அத்தி மரங்கள் நிறைந்த பகுதியில் ஒரு காட்டாறு குறிக்கிடும். அத்திரி மகரிஷி தவம் செய்யும் பகுதியாம். அங்கிருக்கும் ஊத்துக்கு அத்தி ஊத்து என்று பெயர்.

சிவபெருமானின் சடாம குடத்திலில் இருக்கும் கங்கையிலிருந்து நீரை எடுத்து இங்குள்ள நான்கு மலைகளுக்கு நடுவில் விட்டு உருவாக்கப்பட்டதாக தல புராணம் கூறும் இது,

‘கெளண்டின்னிய தீர்த்தம்’.
இந்த ஆற்றில் நீரோட்டம் அதிகமிருந்தால் அங்கிருக்கும் சங்கிலியை பிடித்தபடி கடக்க வேண்டும். சங்கிலிப்பாறை, சங்கிலி பாதை என இந்த இடம் கூறப்படுகிறது.

அங்கிருந்து கோணல் மாணலாக செல்லும் பாதையில் இரண்டு கி.மீ தூரத்தை கடந்தால், பசு மிதி பாறையை பார்க்கலாம். இது, தலபுராணம் கூறும் காமதேனுவின் கால் தடம். தொடர்ந்து இரண்டு கி.மீ தூரம் நடந்தால், கோரக்கர் குகை உள்ள இடத்தை அடையலாம்.

அர்ஜுனா நதி எனும் ஒடை க்கு அருகே, கோரக்கர் வசித்த குகையும், குண்டா எனும் குழியையும் பார்க்கலாம். இந்த நதியில் எப்போது வெள்ளம் வரும் என யாருக்கும் தெரியாது. திடீர் வெள்ளத்தினால் ஏற்படும் விபத்தினை தடுப்ப தற்காக, வனத் துறையால் இந்த பகுதி தடை செய்யப்பட்டுள்ளது.

கோரக்கரை வணங்கி பயணத்தை தொடர்ந்தால் அடுத்து வருவது இரட்டை லிங்கங்கள். இராமதேவர் வழிபட்ட இடமாம். இக்கோயிலின் எதிர் பக்கத்தில் இராமதேவர் குகையும் இருக்கிறாம்.

இது, கரடிகள் உலாவும் பகுதியாம். அங்கிருந்து இரண்டு, மூன்று கி.மீ தூரம் நடந்தால் பசுக் கிடை, வெண்ணாவல் மரத்தினடியில் பிசுப்பிக்கப்பான எண்ணெய் கலந்ததது போன்ற நீர் ஊறும் வெண்ணால் ஊற்று, ஆசனப்பாறை, பச்சரிசிமேடும் வன துர்க்கையையும் காணலாம்.

வன துர்க்கையை தரிசித்து விட்டு ஒரு கி.மீ தூரம் நடந்தால், பிரம்ம தீர்த்தம் எனும் சிற்றோடையின் அருகே, பிலாவடி கருப்பண்ணசாமி கோயில்.

கருப்பர், காலங்கி நாதரால் பிரதிட்டை செய்யப்பட்டவர். கருப்பருக்கு பக்கத்தில் எப்போதும் ஒரு பலாக்காய் ஒன்று காய்த்து இருக்குமாம். கருப்பர், ஒரு தைலக் கிணற்றை காவல் காப்பதாக சித்தர் பாடல்கள் மூலமாக அறிய முடிகிறது.

அங்கிருந்து சமதளபாதையில் ஒரு கி.மீ நடந்து ஒரு சிற்றோடையை கடந்தால், சுந்தரமாகலிங்கம் கோயிலை அடைலாம்.

தோரண வாயிலில் நுழைந்ததும் அகத்தியர் பிரதிட்டை செய்த சுந்தரலிங்கர் தரிசித்து விட்டு நடந்தால், மனிதனாக பிறந்த தேவலோகத்தை சேர்ந்த பச்சைமாலுக்கு முக்தி அளித்து, சித்தர்கள் வேண்டுகோளின்படி மகாலிங்கமாக எழுந்தருளியுள்ள, வடக்கு பக்கமாக தலை சாய்ந்த சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் சட்டைநாதர் குகையும் , 18 சித்தர்கள் சன்னிதியும், பார்வதி தேவியால் பிரதிட்டை செய்யப்பட்ட சந்தன மகாலிங்கத்தையும் தரிசிக்கலாம். சித்தர்களின் அருளை பெறலாம். ஆசியை உணரலாம்.

மகாலிங்கம் கோவிலிருந்து, மனதும் உடலும் ஒத்துலைத்தால்… சித்தர்களின் உத்தரவு கிடைத்தால், சுமார் இரண்டு மணி நேரம்… மலை பயணத்தை தொடர்ந்தால் பெரிய மகாலிங்கத்தையும், தவசிப்பாறையையும், சித்தர்கள் தவம் செய்யும், செய்த குகைகளையும் காணலாம்!🌿🙏🌼🌸

Previous Post

இரட்டை விநாயகரை வணங்குங்கள்! திருமண தடை விலகும்

Next Post

சதுரகிரி மலைபயணம்.

Next Post
Sathuragiri mountain trek.

சதுரகிரி மலைபயணம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »