கிரகண காலங்களை எப்போதும் பயன்படுத்தி கொள்ளுங்கள்
கிரகண காலங்களை எப்போதும் பயன்படுத்தி கொள்ளுங்கள் ஆன்மீக சொந்தங்களே.
(1) வீட்டில் ஒரு முறை ஜபித்தால், 10 முறை வாய்விட்டு சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
(2) பழமையான கோவிலுக்குள் ஒரு முறை ஜபித்தால், 1000 முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
(3) கடலோரக் கோவிலில் ஒரு முறை ஜபித்தால், 1 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
(4) மலை மீது இருக்கும் கோவிலில் ஒரு முறை ஜபித்தால் 2 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
(5) வருடப் பிறப்பு (சித்திரை 1), மாதப் பிறப்பு (தமிழ் மாதத்தின் முதல் நாள்) போன்ற நாட்களில் ஜெபிக்க மேலே சொன்ன எண்ணிக்கையில் 100 மடங்கு அதிகமாகும்.
(6) அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நாட்களில் ஜெபிக்க மேலே சொன்ன எண்ணிக்கையில் 1000 மடங்கு அதிகமாகும்.
(7) சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும் நாட்களில் ஜெபிக்க மேலே சொன்ன எண்ணிக்கையில் 10,000 மடங்கு பலனாக அதிகரிக்கும்…..
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும் நாட்களில் ஜெபிக்க மேலே சொன்ன எண்ணிக்கையில் 10,000 மடங்கு பலனாக அதிகரிக்கும்…..
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வரும் நாட்களில் கிரகணம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து 10 நிமிடம் கழித்து ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். கிரகணம் முடிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே ஜபித்து முடிக்க வேண்டும்.
இந்த கால கட்டத்தில் ஒரு முறை மந்திரம் ஜபித்தால்,100 கோடி மடங்கு வாய்விட்டு சொன்னதற்கான புண்ணியம் கிட்டும்
அதிலும், வருகின்ற ஐப்பசி மாதம், 8ம் நாள் (25.10.2022) , செவ்வாய்க்கிழமை, தீபாவளிக்கு மறுநாள் மாலை 05:10 மணிமுதல் 05:45 வரை ஏற்படவிருக்கும் சூரியகிரஹணம் அபூர்வமானது. இந்த சூரியக் கிரகண நேரத்தில் ஜெபம் செய்வது என்பது 1 லட்சம் கோடி தடவை வாய்விட்டுச் சொன்னதற்கான புண்ணியம் கிடைக்கும்.
மாலை 05:10 மணிமுதல் 05:45 வரை சூரியக்கிரகணம் முழுமையாக இருக்கும். இந்த வேளை உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை வீட்டில் ஜபிப்பது, தியானம் செய்வது மிகவும் நன்று.
கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்க வேண்டும். ஜபிக்க ஆரம்பிக்கும் போது ஒரு தீபம் எரிந்து கொண்டும், பத்தி புகை பரவிக்கொண்டும் இருக்க வேண்டும்.
உலகத்தில் எந்த நாட்டில் வசித்தாலும், அங்கே இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
கிரகண காலத்தில் சூரிய ஒளி மறைக்கப்படுவதால் இன்று சூரியன் இயல்பு தன்மையை இழக்க நேரிடும். அதனால் தான் குழந்தைகள், கர்ப்பினிகள், நோயுற்றவர்கள் என அனைவரும் கிரகணம் விட்டபிறகு குளித்துவிட வேண்டும்.
தோஷமுள்ள நட்சத்திரங்கள் கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும்.
கதிர்வீச்சு பாதிப்பு:-
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு.
அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
யாகங்கள் செய்யலாம்:-
முழு கிரகண வேளையில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும்
கிரகண தர்ப்பணம்:-
கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தந்தருளும் என்கிறது சாஸ்திரம். மேலும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.










