காரிய சித்தி தரும் மந்திரங்கள்.
நோயின்றி உடல் ஆரேக்கியமாக இருக்க
ஓம் நமோ நாரஸிம்ஹாய
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை சொல்லி வந்தால் வஜ்ரம் போல் அமைப்பு ஏற்படும்.
நினைத்த காரியம் நிறைவேற.
*நிர்மலாய நிபந்தாய நிர்மோஹாய நிராக்ருதே
நமோ நித்யாய ஸத்யாய ஸத்காம நிராதயச*
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை பாராயணம் செய்து வரவும்.
ஆயுளை அதிகரிக்க
*காலாந்தகாய கல்யாய கலநாய க்ருதே நம
காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை பாராயணம் செய்ய தீர்க்காயுள் உண்டாகும்*
நம் மனதில் ஏற்பட்டுள்ள நிரந்தர பயம் நீங்க *தினம் ஸஹஸ்ர பாஹவே துப்யம்
ஸஹஸ்ரசரணாயச
ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே*
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை ஜபிக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தீர்த்தம் வைத்து இதனால் மந்திரித்து உட்கொள்ளவும். வெகு சீக்கிரத்தில் பயம் நீங்கும்
துஷ்டக்ரஹங்கள் பூத ப்ரேத பிஸாசங்கள் விலக.
*ஸத்ருக்நாய ஹ்யவிக்நாய விக்நகோடிஹராய ச
ர÷க்ஷõக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம*
இந்த ஸ்லோகத்தை ஒரு மண்டலம் காலை, மாலை எட்டு முறை பாராயணம் செய்யவும்.
ஜ்வரம், ரோகங்கள், அபிசாரம், சூந்யம் ஒழிய.
*ஸர்வ ஜ்வரவிநாஸாய ஸர்வ ரோகபஹாரிணே
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே*
இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை 11 முறை பாராயணம் செய்யவும்.
புஷ்டியைப் பெற
மஹாதம்ஷ்ட்ராய துஷ்டாய நம: புஷ்டிகராய சஸிபிவிஷ்டாய ஹ்ருஷ்டாய புஷ்டாய பரமேஷ்டிநே
இந்த ஸ்லோகத்தை தினமும் பத்து முறை பராராயணம் செய்து பசும்பாலில் ஜபித்து உட்கொண்டு வரவும்.
அபஸ்மாரம் (காக்காய் வலி) விலக.
*அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே
அந்நதாயாந்நரூபாய ஹ்யந்நாயாந்ந புஜே நம:*
இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறை கூறி வர ஆறு மாதத்தில் அதிசயமான குணம் தெரியும்.
வாக்குவன்மை பெற
*அத்வாதீதாய ஸத்வாய வாகதீதாய வாக்மிநே
வாகீஸ்வராய கோபாய கோஹிதாய கவாம்பதே*
இந்த ஸ்லோகத்தை தினமும் 51 முறை காலை, மாலை பாராயணம் செய்யவும்
குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரஹதோசம் விலக.
*நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ
நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ
நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ
நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ*
இந்த ஸ்லோகத்தை குழந்தைகள் தூங்கச் செய்யும் போது மூன்று முறை பாராயணம் செய்து தூங்க வைத்தால் தோஷம் அணுகாது
16 கண்களில் ஏற்படும் நோய் விலக.
ஸுஜ்யோதிஸ்த்வம் பரம்ஜ்யோதி
*ஆத்மஜ்யோதி ஸநாதந
ஜ்யோதிர்லோகஸ்வரூபஸ் த்வம்
ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி*
இந்த ஸ்லோகத்தை அநுஸந்தாநம் பண்ணினால் பிரகாசமான கண்கள் வாய்க்கும்.











