வணக்கம் நண்பர்களே அன்பர்களே,
கல்யாணம் பண்ணி பார்…
வீட்டை கட்டி பார்….
என்று சொல்லும் நபர்களின் வார்த்தைகள் கடும் வலிகளும் சிரமங்களும் நிறைந்தவை.
எத்தனையோ திருமண தகவல் மையங்கள், மேட்ரிமோனி சைட்கள் வந்தாலும், அதில் பல ஆயிரம் லட்சம் பணம் கட்டினாலும் சரியான , பொருத்தமான வரன் கிடைப்பதற்குள் குடும்பத்தில் உள்ளவர்கள் சற்று கதிகலங்கி தான் போகின்றனர்.
இதில் ஜாதகம் பொருத்தம் பார்த்து முடிவதற்குள் திருமண வயது 30 கடந்து விடுகிறது.
இன்று எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் ஏராளம்.
யாரையும் குறை சொல்வதற்கில்லை.
ஆனால், எல்லோரும் அவர்களின் சொந்த காலில் அதாவது தன்னுடைய உழைப்பில் வாழ்பவர்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.
வசதிகளை கடன் வாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து பெருக்கி கொள்ளலாம்.
ஆனால், கிரகங்கள் விடாது. அத்தனைக்கும் ஆசை பட வைத்து, ஒர் வழி செய்து விடும்.
பத்து பொருத்தம் இப்போது பழசு ஆகி விட்டது. ஜாதக பொருத்தம் இருவருக்கும் குறைந்தபட்ச 20 வருட தசாபுத்தி கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் பார்த்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 15 -20 வருடங்களுக்கு பிறகு கூட விவாகரத்து பெற்று இருக்கிறார்கள்.
இன்று ராமனும் சீதையை தேடுகிறான்…
சீதையும் ராமனை தேடுகிறாள்.
நீங்கள்?










