ஏராளமான பெண்கள், சுமங்கலிகள் காஞ்சி மடத்திற்கு வருவார்கள்.
அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை தானமாகப் பலரும் கொடுக்கும்படி மகா ஸ்வாமிகள் சொல்வார்.
அவ்வாறே பலரும் தானம் செய்வதுண்டு.
அப்போது பக்தர்களிடம் பெரியவர், “”மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூரண பலன் ஏற்படும்.
தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)” என்று அறிவுரை சொல்வார்.
அது மட்டுமல்ல, “உங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை அவசியம் கொடுங்கள்.
இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக் கொண்ட சகோதரிகளும் ஆயுள்விருத்தியுடன் திகழ்வர். அவர்களிடையே உறவு பலப்படும் என்று
எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார்
நாமும் பின்பற்றி வரலாம்











