வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்
1. கேசவ – துன்பத்தைத் தீர்ப்பவன்
2. நாராயண – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
3. மாதவ – திருமகள் மணாளனாக இருப்பவன்
4. கோவிந்த – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்
5. விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6. மதுசூதனன் – புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) மது என்னும் அரக்கனை வென்றவன்
7. த்ரிவிக்ரம் – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8. வாமன – குள்ளமான உருவம் உடையவன்
9. ஸ்ரீதர – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10. ஹ்ருஷிகேச – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11. பத்மநாப – தனது நாபியிலே தாமரையை உடையவன்
12. தாமோதர – உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.🙏🌺











