இசைப் பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1919)
தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கியமாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்பதை
உணர்ந்த பண்டிதர் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல பழந்தமிழ் இசை நூல்களைக்
கற்றுணர்ந்தார்.
இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும்
இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய
கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார்.
இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.
இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றைப் பழந்தமிழ்
இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.
அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.
Cheap Flight ticket..! ALL FLIGHT TICKETS EASY ONLINE BOOKING–✈ Aurobookings.com
திருடப்பட்ட தமிழிசையை மீட்டெடுத்த இக் கனவானைப் பற்றி இன்னமும்
தமிழரில் பெரும்பான்மையோர் அறியாமற்போனது, அறிய முயலாதது
வேதனைக்குரியதே!











