• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நாகலிங்க பூ

siddharbhoomi by siddharbhoomi
June 16, 2022
in ஆன்மிகம்
0
நாகலிங்க பூ
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நாகலிங்க பூ பயன்கள் மற்றும் பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறார் இறைவன்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
நாகலிங்க பூ (Nagalinga Poo) பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறார் இறைவர்.
🌸
அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர்.
🌸
பூவில் நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.
🌸
உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பதுபோல் இருக்கும்.
🌸
விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.
🌸
ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.
🌸
அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளில் இருந்து காக்கும் மரமாகவும், ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
🌸
மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.
🌸
இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.
🌸
இதன் இலைகளை மென்று திண்பதால் பல்வலிக்கு மருந்தாகவும், பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
🌸
இந்த பூவை கையில் வைத்துக்கொண்டு லிங்க பகுதியை உற்று நோக்க நோக்க நம்மை தியானத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் மிக மிக விசேஷமான மலர்
இதையே கடவுளாக வணங்கலாம்.
🌸
உலகமுழுவதும் சைவர்களால் போற்றக்கூடிய பூக்கள் தான் இந்த நாகலிங்கப் பூக்கள், ஏனென்றால் இதன் அமைப்பு ஒரு ஆன்மீக அதிசயம். பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும்,

நடுவில் சிவலிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கு மேல் பல ஆயிரம் தலையுடைய பாம்பு இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும்.
🌸
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கின்ற இப்பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன.
🌸
ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன.
🌸
அக்காலத்தில் நாகலிங்க மரங்கள் கோவில்களில் வளர்க்கப்பட்டன ஏன் என்றால் இந்த அபூர்வ மூலிகை இனம் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன.
🌸
அத்துடன் இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாகவும் நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.
🌸
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உட்கொண்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இம்மரத்தின் பழங்கள் விஷத்தன்மை உடையதால் விஷ காய்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது.
🌸
இதன் பட்டைகள் மலேரியாவை குணப்படுத்தக் கூடியது. பற்களை பாதுகாக்கும் இயல்பு இப்பூக்களுக்கு உண்டு. இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட்டால் பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேற்றப்பட்டு பல்வலியை குறையும் பற்கள் சொத்தையாகாமல் தடுக்கப்படும்.
🌸
இலைகளை அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும்.
🌸
இப்பூவி லிருந்து எடுக்கப்படும் தைலம் குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
🌸
அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் இந்த நாகலிங்க பூக்கள், மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் ஆன்மிகத்துடன் ஆரோக்கியத்திற்கும் வழிகோலுகிறது.
🌸
சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது.

Previous Post

பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

Next Post

சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி

Next Post
சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி

சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அறிவுத்திருக்கோயில் கட்டப்படுவதன் நோக்கம் என்ன?

அறிவுத்திருக்கோயில் கட்டப்படுவதன் நோக்கம் என்ன?

December 15, 2025
போகாப்புனல்

போகாப்புனல்

December 14, 2025
யாரோ ஒருவர் நமக்கு துணையாக (கணவன்_மனைவி) அமைவது ஏன்? எப்படி தெரியுமா?

யாரோ ஒருவர் நமக்கு துணையாக (கணவன்_மனைவி) அமைவது ஏன்? எப்படி தெரியுமா?

December 13, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »