சுவாதி நட்சத்திரம். கஷ்டங்கள் தீர கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நரசிம்ம வழிபாடு
🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
பகவான் நரசிம்மர் அவதரித்த அன்று சுவாதி நட்சத்திர தினம். பகவான் அவதரித்த சுவாதி நட்சத்திர தினத்தில் விரதமிருந்து வழிபடுவதும் நம் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கும் என்பது ஐதிகம்.
🦁
தினமும் வரும் மாலை வேளைக்குப் பிரதோஷ வேளை என்று பெயர். அவற்றை நித்திய பிரதோஷம் என்கிறோம். பிரதோஷ வேளையில் சிவவழிபாடு செய்வதைப் போலவே நரசிம்ம வழிபாடும் செய்வது சிறப்புவாய்ந்தது.
🦁
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர் நரசிம்மர். நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்று கூறுவார்கள். அந்த அளவுக்குத் தன்னை சரணாகதி அடையும் பக்தர்களின் துயரை உடனடியாக நீக்கியருள்பவர் நரசிம்மர்.
🦁
பொதுவாகப் பெருமாள் கோயில்களில் நவகிரக சந்நிதிகள் இருப்பதில்லை. தசாவதாரத்தில் ஒவ்வோர் அவதாரமும் ஒவ்வொரு கிரகத்தின் அம்சம் கொண்டு அருள்பவை.
🦁
இதன்படி நரசிம்ம அவதாரம் செவ்வாயின் அம்சத்தில் விளங்குவது. நரசிம்மரை தினமும் வணங்கி வந்தால் செவ்வாய் கிரகத்தால் உண்டாகும் கெடுபலன்கள் இல்லாமல் போகும்.
🦁
சுவாதி அன்று விரதமிருப்பவர்கள் இன்று கட்டாயம் விரதமிருந்து மாலையில் பானகம், நீர்மோர் ஆகியன நிவேதனம் செய்து கராவலம்ப ஸ்தோத்திரமும் விஷ்ணு சகஸ்ர நாமமும் பாராயணம் செய்து வழிபாடு நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும்.
🦁
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி எனப்படும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை இந்த நாளில் எண்ணிக்கை இன்றிச் சொல்ல, சகல நன்மைகளும் கிடைக்கும் .
🦁
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:
🦁
நரசிம்மர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். நரசிம்மரை தினமும் தியானம் செய்ய, மனபயம் நீங்கும். போராடும் குணம் அதிகரிக்கும். நரசிம்மரின் மடியிலேயே அன்னை மகாலட்சுமி வாசம் செய்வதால், செல்வம் நம்மிடம் நாடிவந்து சேரும். நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
🦁
நரசிம்ம சுவாதி நட்சத்திர நாளின் மகிமை சொல்லில் அடங்காது. இந்த நாளில் நரசிம்மரை வழிபட, சகல நன்மைகளும் வந்து சேரும்.சுவாதி நட்சத்திரம் அன்று பகவான் நரசிம்ம மூர்த்தியை வணங்கி மகிழலாம்.











