நெல்லை புத்தக கண்காட்சி யில் இப்படி யானதொரு புகைப்படத்தை நிறைய பேர் பகிர்ந்து வருகிறார் கள்.
அறிவார்ந்தவர்களையும் சமூக சிந்தனை கொண்டவர்களையும் தன்னகத்தே கொண்டது இம்மண் என்பதை தற்கால சமூகம் அறிந்து கொள்ள இந்த புகைப்படம் ஒன்றே சான்று.
பல்வேறு சிக்கனங்களை கடைபிடித்தால் கூட புத்தக வாசிப்பில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
குழந்தை பருவம் தொட்டே புத்தக வாசிப்பை உணவூட்டுவது போலவே தவறாது அளித்து வருபவர்கள் .
இந்த அம்மையின் புகைப்படத்தில் என் தாயம்மை ஆச்சியை காண்கிறேன். வீட்டிற்கு வரும் பல்வேறு புத்தகங்களை வேலைகள் ஓய்ந்த நேரத்தில் இதுபோலவே கண்களை சுருங்கி கொண்டு வாசிப்பார்.
அந்த காலத்திலேயே சுழல்நூலகம் மூலம் புத்தகங்கள் வரும். அதை சுழற்சி முறையில் முதலில் வாசிக்க மிகப்பெரிய சண்டை யும் வரும் எங்கள் வீட்டில். சித்திகளோ நானோ கிடைத்தால் எங்களை வாசிக்க சொல்லி கேட்பார். சில இடங்களில் நிறுத்த சொல்லி மீண்டும் வாசிக்க சொல்வார்.இவர் போன்றவர்களே வாசிப்பின் வேர்கள்.
எனது அப்பா தாத்தா அம்மா தாத்தா மாமா சித்திகள் இவர்களே எனது இன்றைய வாசிப்புக்கு ஆணிவேர் கள்
இப்புகைப்படத்தை காணும் போது எம்மண்ணின் வாசிப்பின் வேர் இன்னும் வாடாமல் உள்ளது கண்ட மகிழ்ச்சி யில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய காலம் போல எளிதாக புகைப்படம் எடுக்க வசதி கிட்டியிருந்தால் என் மனப்படத்தில் இருந்து புத்தகம் வாசிக்கும் என் தாயம்மை ஆச்சியை நீங்களும் பார்த்திருக்கலாம்.










