என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன். இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ங்னே வந்து மூண்டதுவே.
#பட்டினத்தார்_(7ம்பகுதிபாடல்1)
#பட்டினத்தார்_கட்டளைக்_கலித்துறை_யாப்பால்
கழுவேற்றப்போகிறார்களே என்ற மரண பயமோ, உயிர் மேல் பற்றோ இன்றி, எனது முன் வினை இவ்வளவு மோசமான நிலையில் என்னை கொண்டு நிறுத்திவிட்டதே. அப்படியென்றால் நான் எவ்வளவு தீய காரியங்கள் செய்திருக்கவேண்டும் என்று வருந்திப் பாடுகிறார்
பொருள்:
வாழ்வில் நடைபெறும் எந்தச் செயலும், நான் எனும் இந்த உயிராலோ அல்லது அவ்வுயிரைத் தாங்கும் உடலாலோ நடைபெறவில்லை, நடப்பது அனைத்தும் இறைவா உன் செயலால் நடக்கிறது என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்,
இந்த ஊனுடம்பைப் பெற்று இந்த பூமியில் நான் பிறந்த பின்னர் செய்த தீச்செயல்கள் எவையும் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நான் முந்தைய பிறப்புகளில் செய்த தீவினையால் அன்றோ எனக்கு இப்படித் துன்பங்கள் நேரிடுகின்றன. முன் பிறவிப் பயனாலே இந்த வாழ்வில் துன்பங்கள் வருகின்ற அதை நான் அனுபவிக்கிறேன் என்கிறார் பட்டினத்தார்.











