மந்திரங்களில் எளிமையான ஒரு மந்திரம் ‘ராம’ என்ற மந்திரமாகும். தசரதருடைய புதல்வனுக்கு ‘ராம’ என்ற மந்திரத்தின் பெயரைத்தான் வசிட்டர் சூட்டினார். ‘ரா’ என்பது மூலாதாரம். ‘ம’ என்பது தலையின் உச்சியில் உள்ள ஆயிரம் இதழ் இடத்தைக் குறிக்கும்.
‘ராம’ என்ற மந்திரத்தை ஜபம் செய்து வந்தாலே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி கிளம்பி, தலை உச்சிக்குச் சென்று விடும். ராம நாமத்தைச் சொல்லி வந்தாலே ஆத்ம ஞானம் ஏற்படும். ராமர் கூட இலங்கையை அடைவதற்கு பாலம் கட்டிச் சென்றார்.
ஆனால் ஹனுமாரோ ராம நாம பலத்தினால் கடலையே தாண்டிவிட்டார். ஆனால் உடனே, ‘ராம என்று சொன்னேனே; எனக்கு ஒன்றும் நடக்கவில்லையே’ என்று கேட்கக் கூடாது. ஒரு விதையைப் போட்டால் அது முளைத்து,
செடியாகி, மரமாகி, பூத்து, பிஞ்சுவிட்டு, காயாகி, பழமாகின்ற வரையில் பொறுத்திருக்க வேண்டும். அதுபோல், நாம் ஜபம் செய்யும் மந்திரத்தை பொறுமையுடன் அது சித்தியாகும்வரை ஜபம் செய்து கொண்டே வர வேண்டும். ‘ராம’ மந்திரத்திற்கு தாரக மந்திரம் என்று பெயர். ‘தாரகம்’ என்றால் என்ன? ‘தாரகம்’
என்ற சொல்லுக்கு தாண்டவிடுவது என்று பொருள். எதில் இருந்து தாண்ட விடுவது? பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து தாண்டவிடுவது என்று பொருள்.
கம்பநாட்டாழ்வர், அருட்பிரகாச வள்ளலார் போன்றவர்களும் ராம நாமத்தின் பெருமையை பாடியுள்ளார்கள். பெரிய கடுமையான தவம் செய்து தானே நாம், பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட முடியும்.
‘ராம’ நாமம் மட்டும் சொன்னால் அது எப்படி நடக்கும் என்ற கேள்வி எழலாம். ஆயிரம் வருடங்கள் ஆன ஆலமரத்தை கீழே சாய்ப்பது எவ்வளவு கடினம். அதற்கு எவ்வளவு முயற்சியும், உபகரணங்களும் தேவைப்படும் என்று உங்களுக்கே தெரியும்.
ஆனால் அந்த மரத்தை மென்மையான கரையான்களும் அரித்து கீழே தள்ளிவிடுகின்றனவே! அதுபோல்தான் மென்மையான, எளிமையான ராம நாமமும் நம்முடைய பாவத்தையெல்லாம் அரிக்கக்கூடியது.
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.siddharbhoomi.com எங்களை தொடர்பு கொள்ள siddharbhoomi@gmail.com WhatsApp +91-7305018180










