• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

siddharbhoomi by siddharbhoomi
July 11, 2022
in கோயில்கள்
0
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

சுவாமி : துர்க்கை,மாரியம்மன் ( முத்துமாரி)

தீர்த்தம் : வெல்லகுளம்

தலவிருட்சம் : வேம்புமரம்

தலச்சிறப்பு : இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யபடுவதில்லை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பிராத்தனைக்காக இங்கு தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர்.

திருத்தல வரலாறு : தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று “சோழசம்பு” எனும் நூல் கூறுகிறது.

இக்கோவில் உருவானதற்கு பல காரண கதைகள் சொல்லப்படுகின்றன அவற்றில் சில! தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்து கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார்.

அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 5கிமீ தூரத்தில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து, புன்னைகாட்டிற்கு வழியமைத்து அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய ஊர் அமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தை ஆலயத்திற்கு வழங்கினான்.

துளஜேந்திரராஜாவின் புதல்விக்கு கண்பார்வை வந்த கதை:- மராட்டிய மன்னன் துளஜேந்திரராஜாவின் புதல்விக்கு கண்பார்வை அம்மை நோயினால் போய்விட்டதாகவும், அவன் அன்னையை மனமுருக வேண்டி அவள் சந்நிதியில் மன்றாடியபோது, அந்தப் பெண்ணுக்குக் கண்பார்வை வந்துவிட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

மன்னன் துளஜேந்திர ராஜா அன்னைக்கு அழகிய கோயிலை எழுப்பினான். புன்னை வனத்தில் மறைந்திருந்ததால் அவள் புன்னைநல்லூராள் என்றே அழைக்கப்பட்டாள். தஞ்சையில் மராட்டிய மன்னர்கள் காலத்தில் ரெசிடெண்ட் என்ற அந்தஸ்த்தில் இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கும் இந்த அம்மன் தனது சக்தியைக் காட்டியதாகவும்,

அதுமுதல் அந்த ஆங்கிலேயனும் அன்னையின் அடிபணிந்து பக்தனாக இருந்ததாகவும் தெரிகிறது. மராட்டிய மன்னர்களே இக்கோவிலை பெரிய கோவிலாக கட்டி இருப்பதாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாறுகளை பார்க்கும் போது அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பது புரிந்திருக்கும்.

குறிப்பு:- சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது.

மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள்.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 3 மணிமுதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

திருவிழாக்கள் : ஆடி-கடைசி ஞாயிறு முத்துபல்லக்கு,

ஆவணி – கடைசி ஞாயிறு “தேரோட்டம்”,

புரட்டாசி –தெப்ப உற்சவம்,

நவராத்திரி திருவிழாசிறப்பாக நடைபெறுகிறது.

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்

கோயில் முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501, தஞ்சாவூர் மாவட்டம்.

Previous Post

தெய்வத்தின் குரல்

Next Post

சகட தோஷம் விலக எளிய பரிகாரம்!

Next Post
சகட தோஷம் விலக எளிய பரிகாரம்!

சகட தோஷம் விலக எளிய பரிகாரம்!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »