புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி03-10-22.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன.
இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு
திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.
☘️
உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம். பைரவருக்குரிய திதி என
சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை
அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர்
வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை. அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு
வேறுபாடுகள் மட்டுமே உண்டு.
☘️
முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும். எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டுதல் கூடாது.
☘️
இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். vவளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும். வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.
☘️
நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும். தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் sதொடங்கும். பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம். தவறில்லை.
☘️
“விரிந்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.”
– (#திருநாவுக்கரசர்)
☘️
இந்த பாடலில் கால பைரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.
☘️
பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பைரவ மூர்த்தியாக கோலம் கொண்ட mசிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள்.
☘️
தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.










