நாணல்காடு சிவகாமி அம்பாள் சமேத திருகண்டீஸ்வரர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாணல்காடு சிவகாமி அம்பாள் சமேத திருகண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பணி விரைவில் நடைபெற வேண்டி : சிவனடியார்கள் குழுவினர் பெளர்ணமி ஹோமத்தை வெகு சிறப்பாக நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், நாணல்காடு சிவகாமி அம்பாள் சமேத திருகண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பணி விரைவில் நடைபெற வேண்டி பௌர்ணமி ஹோமம் நேற்று (09.10.2022) சிவனடியார்கள் குழுவினர்கள் மூலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென் திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காட்டில் வீற்றிருக்கும் அன்னை சிவகாமி உடனாய திருக்கண்டீஸ்வரர் ஆலயமானது சுமார் 800 ஆண்டு பழமை வாய்ந்த ஆலயமாகும்.
சனிதோஷம், திருமணத்தடை, புத்ருதோஷம் போன்றவற்றை நிவர்த்தி செய்வதற்காக இந்த ஆலயத்திற்கு பல ஊர்களில் இருந்தும் சிவபக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிவனடியார்கள் குழுவினர் ஒன்றிணைந்து பௌர்ணமி அன்று ஹோமம் நடத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.
இந்த ஹோமம் நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஹோம பூஜையை ஏற்பாடுகள் அனைத்தையும் சிவனடியார்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.










