ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் 75வது குடியரசு தினம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திமடைந்த பின்பு இந்தியாவிற்கு என தனி அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைக்கு வந்த தினம் தான் குடியரசு தினம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1949 நவம்பர் 26ம் தேதி முழுமையாக டிராஃப்ட் செய்யப்பட்டு 1950 ஜனவரி 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அம்பேத்கர் கொண்டு வந்த இந்த அரசியலமைப்பு சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த நாளை நாள் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.
இந்த நாளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்படும். எனவே இந்த பதிவில் குடியரசு தின கவிதைகள், பொன்மொழிகள் மற்றும் தமிழ் குடியரசு தின வாழ்த்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்து செய்திகள் பகிர்வதற்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.











