• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஓய்வு Retirement

siddharbhoomi by siddharbhoomi
February 15, 2022
in பொது
0
ஓய்வு Retirement
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஓய்வு Retirement .

எப்போதும் இறைவழிபாடு செய்யுங்கள் நல்லது இனிதே நடக்கும்.

🌷 ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு

இறைவனுடைய கருணையினால் நமக்கு அளிக்கப்படும் நல்ல காலம் ஆகும்.

🌷 ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று

மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்திவிடுவார்கள்..

🌷 நாம் செய்த வேலையை எப்படி மனதார விரும்பி வாழ்ந்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை

காதலித்து செலவு செய்ய வேண்டும். இல்லையா? பிடித்ததுபோல் நல்ல அழகாய் உடை

அணியுங்கள்.

🌷 சில நண்பர்கள், ஓய்வு பெற்ற பிறகும் உடம்பில் சக்தி இருக்கும்வரை வேலைக்கு போகலாம்

என்று,கையில் அதிகம் காசிருந்தும் மீண்டும் வேலையை எங்கோ தேடிக்கொண்டு

தொடர்வதை மட்டும் பார்க்க முடிகிறது

🌷 அது ஏன் என்று மட்டும் புரிவதே இல்லை.மீண்டும் இந்த பணத்தை சேர்க்க யாருக்காக

துரத்துகிறீர்கள்? மூப்பிலும் தினம் உழைத்தால்தான் சோறு என்ற வாழ்க்கை.. சிலருக்கு மட்டும்

சபிக்கப்பட்ட, அல்லது சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக

வேண்டுமானால் இருக்கலாம்

🌷 ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை, இருந்தாலும் அந்த

பணத்தை நோக்கி துரத்தி கொண்டு ஓடுகிறார்கள் ஓய்வுக்கு பின் நமக்கானா வாழ்க்கையை

இனியாவது வாழ்வோம் என்று கொஞ்சமும் இல்லாமல்

🌷 உங்களுக்கு பிடித்த, வேலையை சமயத்தில் செய்ய முடியாததை செய்யுங்கள். உங்களுக்கு

குருவிகளுக்கு கூடு கட்டுதலோ, மரம் நடுதலோ ஆசையாக இருக்கலாம்.. உங்களுக்கு கதை

கட்டுரை ஆன்மீகம் இப்படி எதையாவது செய்யலாம்.

🌷 இதுவரை ஓடிய நாட்களில் பார்க்கமுடியாத இடங்களை பாருங்கள். காலை உணவை

நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு நேரத்துக்கு நன்றாக தேவையான செரிமான

ஆகக்கூடிய உணவை சாப்பிடுங்கள்

🌷. கொஞ்சம் நம்முடைய பழைய நண்பர்கள், உறவுகளுடன் மனம் விட்டு பேசுங்கள்,இதில்

அவர்கள் பேசவே செய்வதில்லை நாமே பேசுகிறோம் என்று ஈகோ பார்க்க வேண்டாம்.

🌷 அதிகாலையில் எழுந்திருங்கள் வாய் விட்டு நிறைய சிரியுங்கள். உங்கள் காலத்து

நண்பர்களோ, பிடித்த, கூட வேலை செய்தவர்களோடு மாதம் ஒரு முறையாவது மறக்காமல்

எல்லாவற்றையும் பேசுங்கள் அல்லது அவர்களை நேரில் சந்தியுங்கள் .

🌷 மிக மிக நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும்

துக்கங்களையும் பகிருங்கள். அப்படி இருந்தால் நம் துக்கம் ஒன்றுமில்லை என்று நமக்கு

தெரியும்

🌷 தேவையான உடற்பயிற்சியினை இயன்றவரை செய்துவிடுங்கள், நேரத்துக்கு மருந்தை

உட்கொள்ளுங்கள். நம் நண்பர்கள்,நம் உறவினர்கள் எங்கோ ஒருவர் இறப்பார்கள். அடுத்து நாம்

தான் என்று ஒருபோதும் பயப்படாதீர்கள். அந்த வரிசை கடவுளிடம் மட்டுமே இருக்கிறது.

🌷 டாய்லெட் கதவுகளை பூட்டிக்கொள்ளாதீர்கள், தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச்,

சாவி வைத்துக்கொள்ளுங்கள்.

🌷 தெரியாதவர்களுக்கு கதவைத்திறக்காதீர்கள். சேர்த்துவைத்த பணத்திற்காகவோ, பென்ஷன்

பணத்திற்காகவோ, ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவினர்கள் சொந்தம் கொண்டாடினால்,

காபி கொடுத்து அனுப்பிவிடுங்கள். இருக்கும் பணத்தை சாமர்த்தியமாய் போட்டு

வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுங்கள்.

🌷 பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்களை அவர்களுக்குள் பார்க்கலாம்.

🌷 வேலையை விட்டுத்தானே ஓய்வு பெற்றோம்? இறந்தா போய்விட்டோம் இல்லையே

அப்புறம் ஏன் கவலைபடுகிறீர்கள்?

🌷 இவை அனைத்தும் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு மட்டும் அல்ல… அவர்கள் பெற்ற

பிள்ளைகளுக்கும் சேர்த்து தான்..!

🌷 ஓய்வு பெற்ற தங்களது பெற்றோர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையையும்,

சுதந்திரத்தையும்… அவர்களின் ஓய்வில் எவ்வித மன உளைச்சலும் ஏற்படுத்ததாத வகையில்..,

பெற்றோர்களின் உடல், மன நலன் கருதி பிள்ளைகளும் நடந்து கொள்வது அவர்களின்

வாழ்க்கையில் ஈடற்ற மகிழ்வையும், ஆரோக்யத்தையும் அளிக்கும்.

🌷 வாழ்வியல் போராட்டத்திற்காக ஓடிய ஓட்டத்தில்… பணி ஓய்வு என்பது அடிபணிந்து, சகித்து,

பொறுமை காத்து, அவமானப்பட்டு, குடும்பத்திற்காக ஒரு சுமை தாங்கியாக தங்களது வாழ்வை

அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை ரசிக்க இந்த சமூகம்

நமக்களித்த வரம் இது…

🌷 இதையும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சுய நலத்திற்காக இழக்காதீர்கள்.

🌷 எப்போதும் இறைவழிபாடு செய்யுங்கள் நல்லது இனிதே நடக்கும். இறைவனிடம்

உங்களை ஒப்படைத்து விட்டு உங்கள் பணியை செய்துகொண்டே இருங்கள் நோய்

நொடியின்றி நல்ல ஆரோக்கியத்தை இறைவன் கொடுப்பான்.

வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

Previous Post

பவானி சங்கமேசுவரர் திருக்கோவில்

Next Post

மாசி மாத பௌர்ணமி.

Next Post
மாசி மாத பௌர்ணமி.

மாசி மாத பௌர்ணமி.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »