திரு.சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் 133 ஆம் ஆண்டு அவதார திருநாள்
ஆதித்த கரிகாலசோழன் படுகொலை மர்மத்தை உடைத்த காட்டுமன்னார்கோயில் – உடையார்குடி கல்வெட்டை கண்டறிந்து தமிழ் உலகிற்கு தந்தவர்…!
ஏழத்தாழ 8000 தமிழ் கல்வெட்டுகளை நேரடியாக படித்து ஆராய்ந்தவர்…!
சோழ மன்னர்களின் முழுமையான வரலாற்றினை எழுதி வெளியிட்ட முன்னவர்…!
க்ஷத்ரிய மஹா புருஷர்களுக்குள் நடந்தேறிய, வீரசோழப் பேரரசு மீண்டு எழ வழிவகுத்த திருப்புறம்பியம் பெரும்போர் என வரலாற்றாளர்களால் போற்றப்படும், அதி முக்கிய வரலாற்று போர் நடந்த திருப்புறம்பியம் கிராமத்தில் தோன்றியவர்.
“ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் உண்மை வரலாறு அதன் தாய் மொழியிலேயே எழுதப்படுதல் அவசியம்” என்கிற கருத்தை உறுதியாக கொண்டிருந்த பண்டாரத்தார், தனது நோக்கத்தை நிறைவேற்றிடும் கனவை சுமந்து தன் வாழ்நாள் முழுமையையும் இதற்காகவே அர்ப்பணித்தார் என்பது கொண்ட கொள்கையில் எவ்வளவு அறமும் நெறியும் ஒழுக அவர் வாழ்ந்திருந்தார் என்பதற்கு தக்க சான்று.
சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின.
1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார்.
இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது.
இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.
தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (T. V. Sadasiva Pandarathar,
திருப்புறம்பயம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
15 ஆகத்து 1892 – பெப்ரவரி 1, 1960
வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், ஆராய்ச்சி பேரறிஞர் திருப்புறம்பியம் திரு.சதாசிவ பண்டாரத்தார் அவர்களின்
133 ஆம் ஆண்டு அவதார திருநாள் இன்று










