தட்சன் ஆட்டுத் தலையுடன் உயிர்த்தெழுதல்.
சிவபெருமானின் அற்புதங்களில் ஒன்று
இந்து தொன்மவியலில் ஆட்டுத் தலையுடன் இருக்கும் மனிதர். பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலினை நேர்த்தியாய் செய்ய நிறைய மகன்களை படைக்கிறார். அவர்களில் தட்சனும் ஒருவர்.
கங்கை, தாட்சாயிணி, 27 நட்சத்திரங்கள், ரதி என பல பெண்களின் தந்தை. சிவபெருமான் உட்பட பலருக்கும் இவரே மாமனார்.
தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்கிறார். பலரும் எடுத்துரைத்தும் சிவபெருமானை அழைக்கவில்லை. சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட தாட்சாயிணி தந்தையிடம் சென்று நீதி கேட்கிறார். பின்பு விவாதம் முற்றி தன்னையே யாகத்தீயில் அழித்துக் கொள்கிறார் தாட்சாயிணி.
மனைவி இறந்தமைக்காக சிவபெருமான் சினங்கொண்டு வீரபத்திரர் என்பவரைத் தோற்றுவித்து தட்சனை அழிக்க உத்தரவிடுகிறார். வீரபத்திரர் யாகத்தில் கலந்து கொண்டிருப்பவர்களை அடித்து துவம்சம் செய்து, இறுதியாக தட்சனின் தலையை வெட்டிவிடுகிறார்.
அதன்பின்பு தட்சன் தலை இழந்து முண்டமாக மரணித்தார். இறுதியாக சிவபெருமான் தன் சினம் தணிந்ததும் வீரபத்திரரால் கொல்லப்பட்டவர்களை சிவபெருமான் உயிர்ப்பித்தார்.
தலைகணம் கொண்ட தட்சனின் தலை குண்டத்தில் போட்டு எரிந்துவிட்டதால் சிவபெருமான் அருளால் ஆட்டுத்தலையுடன் தட்சன் உயிர்த்தெழுந்தார்.
#Tuticorin to #Chennai Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
இவரை வீரபத்திரரின் சந்நதியில் உள்ள சுதைச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் காணலாம்.
மகரிஷிகளின் ருத்ர ஜபத்துடன் மீண்டும் யாகம் தொடங்கியது.
ஆட்டுத்தலை பெற்ற தட்சன், யாகத்தில் சிவனுக்கு முதல் அவிர் பாகம் தந்து, அவரது பாதங்களை வணங்கி பூதகணங்களில் ஒருவனாகத் தன்னையும் ஏற்று அருள்புரியும்படி வரம் கேட்டான். சிவனும் அவ்வாறே வரம் தந்தருளினார்.












