மகிழ்ச்சிக்கான ஆறு – விதுர நீதி -18
உடல்நலன், கடன்படாநிலை, சொந்த வீட்டில் வாழ்தல் , நன்மனிதர்களின் துணை, வாழ்வாதாரங்களுக்கான வழிகளில் உறுதி, எதற்கும் பயப்படாமல் நேர்மையாக இருத்தல் ஆகிய ஆறும், ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.
பொறாமையுள்ளோர், அருவருப்புள்ளோர், மனநிறைவற்றோர், கோபமுள்ளோர், எப்போதும் சந்தேகமுள்ளோர், பிறரின் நற்பேறைச் சார்ந்து இருப்போர் ஆகிய ஆறு பேரும் எப்போதும் பரிதாப நிலையிலேயே துக்கமாக இருப்பர்.அவர்களை திருப்தி படுத்துதல் இயலாது.
செல்வத்தை அடைதல், தடையற்ற உடல் நலன், இனிய பேச்சுடைய அன்பிற்குரிய மனைவி, கீழ்ப்படியும் மகன், செல்வம் ஈட்டக்கூடிய திறமை ஆகிய ஆறையும் கொண்ட மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மனித இதயத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் காமம், கோபம், பேராசை, மோகம், வெறி, பொறாமை ஆகிய ஆறையும் அடக்கியவன், தனது ஐம்புலன்களையும் வென்று, எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. எனவே, அவன் எப்போதும் ஆபத்துகளுக்கு இடம் கொடுப்பதில்லை.
திருடர்கள்: பொறுப்பற்றவர்களாலும்,
மருத்துவர்கள்: நோயாளிகளாலும்,
வேசிபெண்கள்: காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாலும்,
புரோகிதர்கள்: வேள்வி செய்பவர்களாலும்,
மன்னன்: சண்டையிடுபவர்களாலும்
கற்றோர்: கல்லாதோராலும் என இந்த அறுவரும் மற்ற அறுவரின் தேவைகளால் வாழ்கின்றனர்.










