சமாதியில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்நித்தியம்.
ஸ்ரீ அரவிந்தர் சமாதியைப் பற்றி ஸ்ரீ அன்னை சொன்னது:
சமாதியைப் பார்க்கும் போது அங்கு நடப்பவற்றைக் கவனிக்கும் போது ஒளிக்கம்பம் ஒன்று வலிமையுடனும் மாறுதலுக்கான ஆற்றலுடனும் அதிர்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்
இரவுகளில், அனைத்தும் அமைதியாக இருக்கும் நேரத்தில் மனிதர்கள் விட்டுச் சென்ற பொய்மைகள், ஆசைகள், பொறுப்பின்மைகள், புகார்கள், எதிர்மறை நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிய இயலாத ஏதோ சில விஷயங்கள் கழுவித் துப்புரவு ஆக்குகின்றன. அவரது சாந்நித்தியத்தை உணரத்தக்க வகையில் மிக அன்போடு
சுற்றுப்புறத்தைத் தூய்மைப் படுத்துகின்றன.
ஸ்ரீ அன்னை










