ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சிவாலயம்
கும்பகோணம் – பட்டீஸ்வரம் சாலையில் இடையே கொறுக்கைக் கிராமத்தில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கான அற்புதச் சிவாலயம் அமைந்துள்ளது.
அகஸ்தியர் பிரான் தம் பத்னியாம் லோபா முத்திரா தேவியுடன் தேய்பிறைச் சதுர்த்தி முதல் வளர்பிறைச் சதுர்த்தி வரை விரதமிருந்தும், இடையில் வரும் பிரதோஷப் பூஜையையும் – ஒரே நந்தி மண்டபத்தில் இரு நந்திகள் அபூர்வமாக அமைந்திருக்கும் இத்தலத்தில் – கொண்டாடியும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தில் பூஜித்து,
மருதாநல்லூர் அருகே உள்ள கருவளர்ச்சேரி யில் சிவலிங்க பூஜைகளை ஆற்றி, கருவளர்ச்சேரியில் அகஸ்தியர் பிரான் தம் பத்னியாம் லோபா முத்திரா தேவியுடன் சதுர்த்தி விரத சக்திகளுடன் தரிசனம் தருகின்ற காட்சியைச் சங்கட ஹரச் சதுர்த்தி நாளில் பெற்று வருவதால், சந்ததிகள் நன்கு தழைக்க உதவும். அதாவது சங்கட ஹரச் சதுர்த்தி நாளில் இவ்விரண்டு ஆலயங்களிலும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
இவ்வாறு பல ஆலயங்களும் பாரதப் புண்ணிய பூமியில் பலரும் அறியாவண்ணம் பல தெய்வீக பொக்கிஷங்களைத் தம்முள் கொண்டுள்ளன. பண்டைய யுகமொன்றில், 33 முக்கோடி தேவர்களும், பிரம்ம தேவருடனும் ஒன்றாகத் தேய்பிறைப் பிரதோஷ நாளில் வழிபட்ட தலம்!
பிரம்ம தேவருக்கும் ஞானம் புகட்டிய சர்வேஸ்வரன் இன்று அமைதியாக, அடக்கமாக, எளிமை யாக, பணிவாக இவ்வுலகே அறியாவண்ணம் கொறுக்கை யில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். பிரம்மபுரீஸ்வரர், பிரம்மஞான புரீஸ்வரர், அம்பிகை புஷ்பாம்பிகை சமேத மூர்த்தியாக அருள்பாலிக்கின்றாள்.
பிரம்ம மூர்த்திக்கும் சங்கட ஹரச் சதுர்த்தி நாளில் சில வகை ஞான சக்திகளை அருளிய மூர்த்தி! பல கற்ப காலம் பிரம்ம மூர்த்தி ஒவ்வொரு வகை ஞானத்தையும் ஒவ்வொரு நாளில் பெற்றுச் சிறப்படைந்த தலம். மேலும். இது போன்ற அரிய தகவல்கள் தொடர்ந்து பெற்றிட நமது ஆன்மீக தகவல்கள் குழுவில் இனையுங்கள் . குழுவில் இனைய தொடர்பு கொள்ள வாட்சப் 73050 18180 what’s app











