செந்தூர் சக்கரவர்த்தி ஸ்ரீ ஷண்முகர் ✨
ஷண்முகநாதா ஷண்முகநாதா
ஷண்முகநாதா சரணம்!
சரவண பவனே சக்தியின் மகனே
ஷண்முகநாதா சரணம்!
சித்திரை நிலவே தத்துவப் பொருளே
செண்பக மலரே சரணம்!
செந்திலை ஆளும் சுந்தர வடிவே
சேவடி தொழுதோம் சரணம்!
முத்திரைப் பவுனே வித்தக அறிவே
முத்தமிழ் அமுதே சரணம்!
மூவிரு முகமே பூவிதழ் மனமே
முடிமணி தொழுதோம் சரணம்!
செங்கனிச்சுவையே திங்களின் ஒளியே சிரித்திடும் எழிலே சரணம்!
சிந்தனைக் கடலே சந்தனக் குடமே
சீரடி தொழுதோம் சரணம்!
பங்குனிக் கதிரே குங்குமச் சிமிழே
பார்வதிமகனே சரணம்!
பழனியம் பதியின் அழகிய மதியே
பணிவுடன் தொழுதோம் சரணம்!
மங்கையர் கனவே சங்கரன் மகனே
மயில் வாகனனே சரணம்!
மங்கலம் தங்கிடப் பொங்கிடம் அருளே
மலரடி தொழுதோம் சரணம்!
பங்கய மலரிதழ் தங்கிய திருவே
பரமனின் குருவே சரணம்!
பன்னிரு விழியே புன்னகை மொழியே
பரிவுடன் அருள்வாய் சரணம்!
முருகா_சரணம்











