• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில்

siddharbhoomi by siddharbhoomi
June 20, 2022
in ஆன்மிகம்
0
ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில்
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி!!!

ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி விஜயாபதி

திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின்

பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் – இந்த

விஜயாபதி. ப்ரம்ம ரிஷி , ராஜ ரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி – நெடு நாட்கள் தங்கியிருந்த

ஸ்தலம்.

இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல்

தடுக்கும் சக்தி வாய்ந்தது; எனவே, பிதுர் தோஷம் நீக்கிட நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம்

அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர

மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலசயாகம் செய்ய வேண்டும்.

ஸ்ரீவிஸ்வாமித்ரமஹாலிங்கசுவாமி திருக்கோவில் . பல ஆண்டுகளுக்கு முன்பாக,

விஸ்வாமித்ர மகரிஷி அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது.

சில நூறாண்டுகளுக்கு முன்பு,விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது.

இந்த விஸ்வாமித்ரர் மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர

மஹாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது

எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு – ஒரு

மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ

ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம்.

நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.

இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன்

இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை

மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால்

முதன்முதலில் தில்லைவன காளியம்மாள் குடியிருக்கும் விஜயாபதியில் நவகலசயாகம்

ஸ்ரீஇராமபிரானுக்கு செய்யப்பட்டது.

விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது, அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை, விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி

ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி இன்று விஜயாபதி மேலூர்,

விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.

ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. .

இங்கே,நவகலச யாகம் செய்ய மதியம் 12 மணிக்குள் வந்துவிடவேண்டும். இறங்குபொழுது எனப்படும் மதியம் 12 மணிக்குப் பிறகு நவகலச யாகம் செய்வதால்,நமது அனைத்து தோஷங்களும் நாசமடைந்துவிடும்.

ஒன்பது கலசங்களில் ஒன்பது விதமான திரவப்பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த ஒன்பது கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள்.

அதன் பிறகு,அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும்,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.

அதன் பிறகு,மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும்.இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.இப்படிச் செய்த பின்னர்,கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு,அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார்.நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.

உடனே,கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும்.

தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள்,எள் பதார்த்தம்,பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும்.நவகலச யாகம் முற்றுப்பெறும்.உடனே, வேறு எந்த கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இப்படிச் செய்வதால்,நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும்.இந்த தோஷங்களில் பிரேத சாபம்,நவக்கிரக சாபம்,குரு சாபம்,குல தெய்வ சாபம் நீங்கும்.

விஜயாபதி நெல்லை குமரி நெடுஞ்சாலையில் வள்ளியூரிலிருந்து பிரிந்து ராதாபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும்.

இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது.

இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே விஜயாபதி ! வள்ளியூர் சென்று அங்கிருந்து போகலாம் கூடங்குளம் வழியாகவும் செல்ல முடியும்

இந்த விஜயா பதியில் உங்களை யார் என்று கொஞ்சமும் அடையாளம் காட்டி கொள்ளாமல் பவுர்நமி தொடங்கி அமாவாசை முடிய தங்கி இருந்து வறியவன் போல பிறரிடம் கையேந்தி பிச்சை எடுத்து அதில் உணவு உண்டு இங்கேயே தங்கித் தவம் இருந்தால் எண்ணிய காரியம் நடக்கும் என்று கேரள அம்சுமான் நாடி கூறுகிறது.

இதை பல ஆண்டுகட்கு அடி ஒற்றி ஒரு திரைப்படம் கூட வந்து மக்கள் வரவேற்பை பெற்றது. பலரும் இந்த பரிகாரம் செய்து தொழில் வெற்றி மற்றும் இன்னல்கள் தீர்ந்து உள்ளனர்.

Previous Post

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்

Next Post

தேய்பிறை அஷ்டமி 21-06-2022

Next Post
தேய்பிறை அஷ்டமி 21-06-2022

தேய்பிறை அஷ்டமி 21-06-2022

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »