வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி கடன் சுமையும் கஷ்டமும் தீர இதை மட்டும் செய்தால் போதும்.
பண கஷ்டமாக இருந்தாலும், மன கஷ்டமாக இருந்தாலும், வேறு ஏதேனும் எதிரி தொல்லை,
மன பயம் இருந்தாலும் சரி, எல்லா பிரச்சினைகளும் நம்மை கடந்து போக, எல்லா
கஷ்டங்களும் தேய்ந்து போக இந்த தேய்பிறை அஷ்டமி அன்று, பைரவரை வழிபாடு செய்ய
வேண்டும்.
பழமை வாய்ந்த எல்லா சிவன் கோவில்களிலும் கட்டாயமாக பைரவரின் சன்னிதானம்
இருக்கும். அந்த பைரவரின் சன்னிதானத்திற்கு சென்று நாளைய தினம் இந்த பங்குனி மாத
தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை செய்வது எப்படி.?
வெள்ளிக்கிழமை யோடு இந்த தேய்பிறை அஷ்டமி வந்திருப்பதால் இந்த வழிபாட்டை ராகு
கால நேரத்தில் செய்வது சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10.30
மணியிலிருந்து 12.00 மணி வரை ராகுகால நேரம்.
இந்த நேரத்தில் சிவன் கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய பைரவர்
சன்னிதானத்திற்கு முன்பாக 2 மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணை அல்லது
இலுப்பெண்ணை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய சிகப்பு துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு, நிலத்தில் ஊற்றி இருக்கும்
அந்த எண்ணெயில் இந்த மிளகு முடிச்சை மூழ்க வைத்து, அந்த அகல்விளக்கு பக்கத்தில் 1
செவ்வாழை, 5 அரளி புஷ்பங்களை வைத்து, மிளகு முடிச்சை தீபமாக ஏற்றி பைரவரிடம்
பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
வைரவரின் சன்னிதானத்திற்கு முன்பாக அமர்ந்து ‘ஓம் பைரவாய போற்றி!’ என்ற மந்திரத்தை உச்சரித்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யும்போது நம் மனதில் இருக்கும் தேவையற்ற பயம், குழப்பங்கள், அனைத்தும் நீங்கி, மனம் தெளிவு பெறும்.
உற்சாகத்தோடு நம்முடைய வேலையில் ஈடுபடுவதற்கு தேவையான மன தைரியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
பொதுவாகவே பைரவர் வழிபாடு என்றால் அது மாலை நேரத்தில் செய்யக்கூடிய வழிபாடாக தான் இருக்கும். இருப்பினும் நாளை வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தில், ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்வது என்பது சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்களால் காலையில் ராகு கால நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி பைரவர் வழிபாடு செய்ய முடியவில்லை எனும் பட்சத்தில், மாலை நேரத்திலும் 6 மணிக்கு மேல் வைரவர் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது.
வெள்ளிக்கிழமை, புதியதாக கல் உப்பு விரலி மஞ்சளை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து எப்போதும்போல வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்துவிட்டு, அதன் பின்பு அந்த கல்லுப்பு எடுத்து நம் வீட்டு சமையலுக்கு பயன் படுத்திக் கொள்வது வீட்டிற்கு குறைவில்லாத தன தானியத்தை கொடுக்கும்.
பூஜையில் வைத்த விரலி மஞ்சளை பணம் வைக்கும் பெட்டியில் வையுங்கள். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். நாளைய தினம் நம்பிக்கையோடு காவல் தெய்வமான பைரவரின் பாதங்களைப் பற்றிக் கொள்பவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் அந்த பைரவர் காவலாக நின்று துணைபுரிவார்.











