உடல் இங்கே இருக்கிறது, ஆனால் மனம் இங்கே இல்லை
இதனை புரிந்து கொள்ள முயற்சி செய்
உடல் இங்கே இருக்கிறது ,ஆனால் மனம் இங்கே இல்லை .
அது இரு கூறுகளாக உள்ளது அதுதான் பிரச்சனை.
நீ தண்ணீர் குடிக்கும் போது உடல் இங்கே இப்போது குடிக்கிறது.
உடலால் எதிர்காலத்தில் தண்ணீர் குடிக்க முடியாது அதனால் கடந்த காலத்தில் தண்ணீர் குடிக்க முடியாது.
ஏனெனில் கடந்த காலம் இல்லை எதிர்காலம் இன்னும் வரவில்லை.
உடல் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கிறது மனம் ஒருபோதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
எப்போதும் அதனால் தான் பதட்டம் உருவாகிறது .
ஒருவன் இருபுறமும் பிளவு படுவதை போன்ற உணர்வைத் தருகிறது .
மனம் எதிர்காலத்தை நோக்கி பாய்கிறது.
உடல் இங்கே இருக்கிறது
பிறகு மனம் உடலை மந்தமாக உள்ளது மெதுவாக உள்ளது .
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்று திட்ட தொடங்கி விடுகிறது.
உடல் வெறுமனே எங்கே இருக்கிறது மந்தமாக அல்ல.
மனம் தான் உடலுக்கு திரும்ப வரும் விஷயத்தை கற்றுக் கொண்டாக வேண்டும் .
உனது மனதில் இருந்து வெளியே வந்து உனது புலன்களுக்குள் செல் .
நீயும் அந்த தன்னம்பிக்கையை ஆனந்தத்தை அடைவாய் உனக்கு மகிழ்ச்சியை கொடுக்க எந்த கடவுளும் தேவையில்லை.
உனக்கு ஆனந்தத்தையும் அர்த்தத்தையும் கொடுக்க எந்த சத்தியமும் தேவையில்லை.
உனது உடலுக்கும் உனது மனதுக்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும் .
அது மட்டுமே தேவை அது ஒரு எளிய செயல்பாடு .
மேலும் இந்த பாலத்தை அமைப்பதை ஒரு இலக்காக கொள்ளாதே !
நீ அதனை ஒரு இலக்காகக் கொண்டால் திரும்பவும் அதே பிரச்சினை பின் கதவு வழியாக வந்துள்ளது.
வெறுமனே புரிந்து கொள் பிறகு திடீரென உன்னுடைய எல்லா சக்தியும் திரும்ப கிடைக்கும் நீ தன்னம்பிக்கையோடு இருப்பாய் .
நீ ஆனந்தமாக இருப்பாய் மேலும் பயமில்லாமல் நகரத் தொடங்குவாய்.
ஓஷோ











