“பரம ரகசியத்தை பக்தருக்கு உணர்த்திய மஹா பெரியவா!”
மஹா பெரியவா மீது பவித்ரமான பக்தி கொண்டிருந்தவர், மயிலம் சிவசுப்ரமணியம். தமிழில்
மூழ்கி முத்தெடுத்து, தமிழுக்கு அழகு சேர்த்த மிக அரிய தமிழறிஞர்களில் மூத்த இடத்தில்
இருந்த பேராசிரியர் அவர்.
அவரது தமிழறிவில் மூழ்கித் திளைத்தவர்கள், அவரைத் தமிழ்க்கடல் என்றே போற்றுவார்கள்.
தமிழ் மீது இருந்த ஆர்வத்தைப் போலவே அவருக்கு மஹா பெரியவா மீது மாறில்லா பக்தி
இருந்தது.
ஒரு முறை மஹா பெரியவர், காஞ்சிபுரம் பக்கத்தில் தெள்ளாறு எனும் ஊரின் ஊடாய்ச்
செல்லும் பாலாற்றங்கரையில் யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது அவரைத் தரிசிக்க
வந்தார், மயிலம் சிவசுப்ரமணியம்.
நேராக மகான் முன் சென்று, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். மயிலம்
அவர்களை பார்த்த பெரியவா அகமகிழ்ந்து ஒரு புன்னகை பூத்தார். அன்றைய தினம் மகான்
பூரண மௌன விரதம் மேற்கொண்டிருந்ததால், மௌன மொழியிலேயே தமது
அனுகிரஹத்தையும் அன்பையும் அளித்தார்.
புரிந்து கொண்டு வணங்கிய பக்தரிடம், ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல நினைத்த மகான், அதை சைகை மூலம் உணர்த்தினார். ஆனால் என்ன ஆச்சர்யமோ, மாமேதையான மயிலம் அவர்களுக்கு, மஹா பெரியவரின் சைகைகள் எதுவும் கொஞ்சமும் புரியவேயில்லை.
அந்த சமயத்தில் எதனாலோ மகானின் அணுக்கத் தொண்டர்களும் சற்றுத் தொலைவில் இருந்ததால், அவர்களாலும் அதை கவனித்துச் சொல்ல முடியவில்லை.
பலமுறை வெவ்வேறு வகைகளில் சைகை காட்டியும் பக்தருக்குப் புரியாததால், மஹா பெரியவா, தொலைவில் இருந்த அணுக்கத் தொண்டர் ஒருவரைப் பார்த்து, ஒரு சிலேட்டும் எழுது குச்சியும் வேண்டும் என்பதுபோல், சைகை செய்தார். வழக்கமாக மௌன விரதம் இருக்கும் சமயங்களில் பெரியவா சில விஷயங்களை இப்படி எழுதிக் காட்டுவது உண்டு என்பதால்,
எப்போதும் ஒரு சிலேட்டும், சாக்பீஸும் வைத்திருப்பார்கள் தொண்டர்கள். அதை எடுத்துவந்து கொடுத்தார் அந்தத் தொண்டர். மயிலம் பக்தரிடம் தான் சொல்ல நினைத்த விஷயத்தை அதில் எழுதினர் மகான். அவர் கைப்பட்டதில்,
அட்சரங்கள்அத்தனையும்சிலிர்த்துக்கொண்டுஅழகழகாய்த்தோன்றின.பக்தரிடம் சிலேட்டை நீட்டினார், மகான். அதை பெற்றுக் கொண்டு படித்த சிவசுப்ரமணியம் அவர்களுக்கு, தமிழ்க் கடவுளே தமிழைத் தமக்கு உபதேசித்தது போன்ற உணர்வு எழுந்தது.
ஒவ்வொரு எழுத்தாக பலமுறை வாசித்து மனதுக்குள் சிலிர்த்தார். பின்னர், அதில் எழுதி இருந்ததை நிச்சயம் நிறைவேற்றுவதாக மஹானிடம் உறுதியளித்தார்.
அடுத்துதான் தொடர்ந்தது ஆசார்யாளின் அருள் விளையாட்டு.தான் சிலேட்டில்எழுதிக்காட்டியதைஅழித்துவிடுமாறு பக்தருக்கு சைகை காட்டினார், மகான். இப்போதும் தமிழ்க் கடலுக்கு ஒன்றும் புரியவில்லை.
அலைகடல் ஆண்டவன் திருவடி பட்டதும் அமைதிக்கடல் ஆவதுபோல், இவரும் தமது ஆற்றலை எல்லாம் ஒடுக்கிக் கொண்டு பவ்யமாக நின்றார். மூன்று நான்கு முறை வெவ்வேறு எளிதான சைகைகள் மூலம் மகான் உணர்த்தியும், அவருக்குச் சற்றும் விளங்கவே இல்லை.
புன்னகைத்தபடியே மயிலத்திடமிருந்து அந்த எழுது பலகையை வாங்கிய மகான், அதை ஒரு முறை உற்றுப் பார்த்தார். பிறகு அதை அப்படியே ஆகாயத்தை நோக்கி உயர்த்திக் காண்பித்தார்.
பக்தருக்குப் மஹா பெரியவா காட்டிய சைகை, இப்போது தன் முன் நீட்டி பெரியவா போடும் கட்டளை என அனைத்தையும் உணர்ந்த இயற்கை தன் பங்கிற்கு மஹா பெரியவரின் அவதார ரகசியத்தை வெளிப்படுத்த ஆவல் கொண்டது.
அடுத்தகணம், மஹானின் கையில் இருந்த அந்தப் பலகையின் சதுரத்திற்கு உள்ளே மட்டும் அளவான மழை பொழிந்தது. சிலேட்டில் அவர் எழுதியவற்றை சில நொடிகளில் அழகாக அழித்துவிட்டு, வந்த சுவடே இன்றி மறைந்தது.
உடனிருந்த மயிலம் அப்படியே சிலிர்த்து நின்றார். சற்றே தொலைவில் இருந்த அணுக்கத் தொண்டர்கள், பக்தர்கள், ஊர் மக்கள் என யாவரும் நடந்ததை எல்லாம் பார்த்து ஆச்சரியத்திலும்,
அதிசயத்திலும் சிலையாகி நின்றார்கள்.பக்தருக்கும் பெரியவாளுக்கும் இடையே நடந்த விவரங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் காஞ்சி மகான், கரம் நீட்டிய கணத்தில் அந்த இடத்தில் மட்டும் மழை பெய்ததும்,
சில நிமிடங்களிலேயே அது நின்றதும் மகான் நடத்தியதிருவிளையாடலேஎன்பதுபுரிந்ததில், கண்டவர்கள்கண்களில்இருந்துஇப்போதுஆனந்தமழைபொழிந்துகொண்டிருந்தது.
பரமரகசியமான தன் அவதாரத்தை, பஞ்சபூதங்களுள் ஒன்றினை தன் விருப்பப்படி இயக்கிக் காட்டி, எளியவனான தனக்கு உணர்த்திய மகானின் திருவடிகளை மீண்டும் மீண்டும் பணிந்து ஆசிபெற்றுப் புறப்பட்டார், தமிழ்ப் பேராசிரியர்.
ஓம்ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
ஹரஹர சங்கரா ஜெயஜெயசங்கரா!











