பிரபஞ்ச சக்தியின் சத்தியமான வாழ்வியல் கோட்பாடுகள் வாழ்க்கை நெறி முறைகள்.
☸️ காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை
பயனுள்ளதாக்குங்கள். மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு
நல்லவராக இருந்தால் போதும்.
☸️ முடிந்தளவு பிறருக்கு உதவுங்கள். ஆனால் யாரிடமும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்.
அன்றாடம் துாங்கும் முன் அரை நிமிடமாவது யோசியுங்கள். தவறை திருத்தும் வாய்ப்பு
கிடைக்கும்.
☸️தர்மவழியில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. ஆசைகளில் சிக்கினால் அது பாவத்தில் தள்ளி
விடும்.
☸️ உண்பது மட்டுமே வாழ்க்கையல்ல; நாக்கை கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாக அடங்கி
விடும்.
☸️ கர்வத்தால் சொல்லும், செயலும் முரண்படும். அடக்கத்தால் சொல்லும், செயலும்
ஒன்றுபடும்.
☸️ உலகம் என்னும் சத்திரத்திற்கு கடவுளே உரிமையாளர். யாரும் இதை சொந்தமாக்க
முடியாது.
☸️ சத்திரத்தில் சில நாள் தங்கும் பயணி போல, மனிதனுக்கு உலக வாழ்வு சில காலம் மட்டுமே.
☸️வாழ்க்கை எவரையும் அவர் விருப்பப் படி வாழ அனுமதிப்பது இல்லை. யார் ஒருவர்
சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து வாழப் பழகுகிறாரோ, அவரே மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
☸️ஒரு மனிதர் தன்னை விட மற்றொருவர் உயர வேண்டும் என ஆசைப் பட்டால் அது நிச்சயம்
ஆசிரியரோ, அப்பாவோ, அம்மாவோ தான். வேறு யாரும் விரும்புவதில்லை.
☸️எடுக்கிற முடிவை சரியா எடுங்கள். இல்லையெனில் உங்களை சுற்றி இருப்பவர்களையும்
அது பாதிக்கும்.
☸️வாழ்க்கை எதைக் கற்றுத் தருகிறதோ இல்லையோ, எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும்
வெளியில் சிரித்துப் பேச கற்றுக் கொடுத்துள்ளது.
☸️உங்களுக்குத் தோன்றும் நல்ல விஷயங்கள் எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல
நினைக்க வேண்டாம். இங்கு நல்லவர்கள் குறைவு. குறை கூறுபவர்கள் தான் அதிகம்.
☸️வாழ்க்கை நீங்கள் மிகவும் சுலபமாக்க வேண்டுமானால் மனதை அமைதி படுத்துங்கள்.
அதுவே போதுமானது.
☸️உங்களை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் முதலில் நீங்கள்
மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுடன் இல்லாத ஒன்றை நீங்கள் யாருக்கும் கொடுக்க முடியாது.
☸️சின்ன சின்ன சந்தோஷங்களையும் கூட அனுபவித்து விடுங்கள். உலக வாழ்க்கையில்
முற்றுப்புள்ளி எந்த நொடியிலும் நிகழலாம்.
☸️நல்லதோ கெட்டதோ ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும் பட்சத்தில் அதை எண்ணி
வருத்தப்பாடாதீர்கள். அதை எதிர்கொள்ள தயாராகுங்கள்.
☸️நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற உணர்வு நமக்குள் எப்போது ஏற்படுகிறதோ அப்போது
இந்த வாழ்க்கை குறை இல்லாத வாழ்க்கையாக தோன்றும்.
☸️ ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. ஆனால்
அந்த இடத்தின் ஒளி இரண்டு மடங்காகி விடும்.
☸️ நம்மால் முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவோம். அதனால் நாம் இழக்க போவது
ஏதுமில்லை.
☸️ பணத்தை சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம்ஆனால் ஒரு போதும் வாழ்க்கையை
சேமித்து பின்னாளில் வாழ முடியாது. வாழ்க்கை வாழ்வதற்கே.
☸️ ஒரு மென்மையான வார்த்தை ஒரு கனிவான பார்வை ஒரு அன்பான புன்னகை
ஆகியவற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழத்திக் காட்ட முடியும்.
☸️ எதிர்காலம் பற்றிய உங்கள் பயத்தால் எந்த அதிசயங்களும் நடந்து விடாது. எதையும் எதிர்
கொள்ள வேண்டும் என்ற துணிவே எதிர் காலத்தை ஏற்றமுடன் சிறப்பாய் வழி நடத்தும்.
கவலையை விடுங்கள் கடமையைத் தொடருங்கள்.
☸️எண்ணங்களை சரியாக கையாளும் கலையை பெற்றால், ஆசைப் படும் வாழ்க்கையை
உருவாக்க முடியும். உங்களுடன் நீங்கள் நல்லதையே பேசினால், நல்லதே நடக்கும் ,,உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
☸️சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லை.
புத்திசாலிகள்.
☸️எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் இருங்கள், எல்லா விஷயங்களையும் நம்மால் மாற்ற
முடியாது, எல்லா விஷயங்களும் நாம் நினைப்பதுபோல் இல்லை. எல்லா விஷயங்களுக்கும்
காரணம் உண்டு, எல்லா விஷயங்களும் நமக்காக நடப்பதில்லை, அதனால் நாம் அமைதியாக
இருப்பதே நல்லது.
☸️எல்லாம் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. எல்லாம் சரி செய்து விடலாம் என்பது
தன்னம்பிக்கை. எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது தான் வாழ்க்கை.
☸️உலகத்தில் நீங்கள் விரும்பும் அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும் வரை ஆர்வமாக
இருக்கும். கிடைத்த பிறகு உபயோகமற்றதாகத் தோன்றும். முடிவில் உங்களிடம் ஒரு சலிப்பை
ஏற்படுத்தும்.
☸️குடும்பம் என்பது அன்பின் பிறப்பிடம். மகிழ்ச்சியின் இருப்பிடம். ஆனால் மனதின் மிகப்
பெரிய தந்திரம் எதையும் அனுபவிக்காமல் எல்லாவற்றையும் ஒத்திப் போடுவது தான்.
☸️யார் ஒருவர் சிறிய உதவி செய்தாலும், அவரை உங்கள் மனதாரப் பாராட்டுங்கள். அதுவே
அவர் மேலும் மேலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு உந்துதலாக இருக்கும்.
☸️லஞ்சம் கொடுத்து வேலைக்கு போறவனும், செலவு பண்ணி பதவிக்கு வரவனும் நேர்மையாக
இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
☸️பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும், வேண்டாத விசயங்களில் கவனம்
செலுத்தாமலும் இருந்தால், உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்லதே நினை. நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்











