• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சிந்தனை தான் அறிவை வளர்க்கும்..!

siddharbhoomi by siddharbhoomi
July 29, 2023
in பொது
0
சிந்தனை தான் அறிவை வளர்க்கும்..!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சிந்தனை தான் அறிவை வளர்க்கும்…!
🦋||🦋||🦋||🦋||🦋||🦋

தெளிவான சிந்தனை இல்லாதவர், தன் ஆற்றலை உணர முடியாது.வாழ்வில் வெற்றி பெற முடியாது…

மற்றவர் முன்னேற்றத்தைக் காணும் போது பொறாமை அவரிடம் உருவாகும். அவர்கள் தவறான வழியில் பதவியைப் பிடித்து விட்டதாகவும், பணத்தைச் சேர்த்து விட்டதாகவும் பேசிக் கொண்டு இருப்பார்கள்…

ஒருவரிடம் பொறாமை சேரும் போது வெறுப்புணர்வு பகையுணர்வு ஆகியவை அவரை அண்டிக் கொள்ளும். பிறரை விமர்சனம் செய்வதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்…

தன் முன்னேற்றத்தைத் தானே தடுத்து நிறுத்தி விடுவார், மூடிய மனமுடையவர், காரியங்களை பிறர் கோணத்திலிருந்து பரிசீலிப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கின்றார்…

நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க விரும்பினால் மனதைத் திறந்து விட்டு புதிய கருத்துக்களையும் புதிய வாய்ப்புக்களையும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பரிசிலிக்க வேண்டும்…

நமக்கு முன்னர் வாழ்ந்த மேதைகள் புதிய கருத்துக்களைச் சொல்லி விட்டு மூடிய மனம் பெற்றவர்களால் பட்ட துன்பம் கொஞ்சமல்ல. மாபெரும் வெற்றி பெற விரும்பும் நீங்கள் திறந்த மனதுடன் புதிய கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும்…

“குதிரையோ, மாடோ இழுக்காமல் தானே நகரும் வாகனத்தைச் செய்வேன்” என்று ஹென்றி போர்டு முதன்முதலில் சொன்ன போது கேலி பேசப்பட்டார்.

காற்றில் உள்ள ஈதர் ஒலி அலைகளைத் தாங்கிச் செல்லக் கூடியது. அதன் உதவியால் ஓரிடத்தில் பேசுவதை ஒலி அலைகளாக மாற்றி பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மீண்டும் பேச்சாக மாற்றிக் கேட்க முடியும் என்று மார்க்கோணி சொன்ன போது அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டினார்கள்.

ராக்கெட் விண்கலங்களை உருவாக்கி மனிதனைச் சந்திரனில் கொண்டு போய் இறக்க முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் முதன் முதலில் சொன்ன போது சாத்தியமே இல்லாத அதீத ஆசை என்று கடிந்து கொள்ளப்பட்டார்கள்…

ஆகவே!, திறந்த மனம் உங்களிடம் இல்லை என்றால் தெளிவான சிந்தனையை நீங்கள் பெற முடியாது. தெளிவான சிந்தனை இல்லாதவர் தன் ஆற்றலை உணர முடியாது. ஊக்கம் கொள்ள முடியாது. வாழ்வில் வெற்றி பெற முடியாது…

ஆம் நண்பர்களே…!

❣️தெளிந்த சிந்தனையோடு செயற்படுபவர்க்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதால் அவ்வெற்றிக்கு வழி வகுக்கும் மிகமுக்கியமான சில செய்திகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்…!

❣️திறந்த மனம் இல்லாதவரிடம் தெளிந்த சிந்தனை பிறப்பதில்லை. விருப்பு வெறுப்புடன் மதிப்பீடுகளைச் செய்வதனால் சரியான முடிவுகளுக்கு வர முடிவதில்லை…!!

❣️அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஆராயுங்கள். தெளிந்த சிந்தனை அமையும். வெற்றிக்கு இதுவும் ஒரு மறைபொருள்…!!!

Previous Post

உங்களுக்கு வெளிச்சமாக இருக்கும்

Next Post

ஞாயிறு ராகுகாலம் பிரதோஷம்

Next Post
ஞாயிறு ராகுகாலம் பிரதோஷம்

ஞாயிறு ராகுகாலம் பிரதோஷம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »