• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

திருக்குறுங்குடி ஆலயம்..!

siddharbhoomi by siddharbhoomi
June 29, 2020
in கோயில்கள்
0
Thirukurungudi

OLYMPUS DIGITAL CAMERA

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

திருக்குறுங்குடி ஆலயம்..!

எண்ணம், செயல், சொல், என அனைத்திலும தனக்கோ, பிறருக்கோ, எக்காலத்திலும் துன்பம் அளிக்காது இருந்து, பிறர் துன்பங்கள் நீக்கும் அனைவரும் புண்ணியம் பெற்றவர்களாக பாவிக்கப்படுகின்றனர்.

ஜாதகரின் பூர்விகம் எதுவோ அங்கிருந்தே ஜாதகருக்கு சகல யோகங்களையும் பெரும் அமைப்பு, சமுதாயத்தில் மற்றவருக்கு முன் மாதிரியாக செயல்படும் தன்மை என நன்மையனைத்தும் அனுபவிக்க பூர்வபுண்ணியம் நிச்சயம் நன்றாக இருப்பது நன்மை தரும்.

இத்தகைய புண்ணியம் கோடி தரும் ஆலயம் குறித்து அறிந்ததுண்டா, வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வாருங்கள்.

எங்கே உள்ளது ?

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் அமைந்துள்ளது அழகிய நம்பிராயர் கோவில். தென் திருப்பதி என்றும்,

இன்னும் பல சிறப்புகளை உள்ளடக்கியதாகவும் விளங்கும் நம்பிராயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

திருநெல்வேலி – நம்மி மலை திருநெல்வேலியில் இருந்து சுமார் 62 கிலோ மீட்டர் பயணித்தால் திருக்குறுங்குடி அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக நம்பி மலைக் கோவில் உள்ளது.

மனத்துக்கு ரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் சென்றதும், மலைப்பாதை தொடங்குகிறது.

மேடும், பள்ளமுமாக இந்த மலைப் பாதை பார்ப்பதற்கு கடிணமான தோற்றம் கொண்டிருந்தாலும் மலைக் காடுகளின் பசுமை வாசனையும்,

குளுமையான மூலிகைக் காற்றும் மலையேறுவோருக்கு கொஞ்சமும் கூட சோர்வையோ, களைப்பையோ அளிப்பதில்லை.

அந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பிரதேசம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்கிறது.

வயதானவர்களுக்கான ஜீப் வசதி மலைக்கோவிலில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்க பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டுவது வழக்கம்.

அனால், பெரியவர்கள் அவ்வளவு எளிதாக இந்த மலை மீது ஏரிச் செல்ல சிரமப்படுவதால் அவர்களுக்காகவே கீழ் கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக 8 பேர் வரை பயணம் செல்லலாம். நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிலபேர் மலையடிவாரம் வரை சென்று காட்டுபாதை வழியே நடந்தே மலை நம்பி கோவிலுக்கு செல்வர்.

திருமலைநம்பி திருக்கோவில் பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக் கூட்டங்களின் நடுவில் நம்பினோரைக் கைவிடேன் என்று கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் திருமங்கையாழ்வார் கட்டியது. ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக

தங்கிய இடம் இந்த மலை என்று கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வைணவ தலத்தின் குரு வைணவ தலத்தின் குரு என்று அழைக்கப்படும் ராமானுஜரின் மந்திர உபதேசம் நம்மி கோவிலில் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் கூறுகிறது.

திருமங்கையாழ்வார் இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் முக்தி நிலையை அடைந்துள்ளார். அவரது ஜீவசமாதி இங்கு அமைந்துள்ளது.

ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், திருமொழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இந்த கோவிலில் உள்ள நம்பிராயரை புகழ்பெற்ற பாடல்களால் பாடியுள்ளனர்.

கால பைரவர் நம்பிராயர் கோவிலுக்கு முன்பாக காவல் தெய்வமாக கால பைரவர் சன்னதி உள்ளது.

பைரவருக்கு பூச்சட்டையும், வடை மாலையும் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும்.

ஈசானிய மூலையில் ஊர் எல்லைக் காளியாக குறுங்குடி அம்மன் கோவில் உள்ளது.

கால பைரவர் நம்பிராயர் கோவிலுக்கு முன்பாக காவல் தெய்வமாக கால பைரவர் சன்னதி உள்ளது. பைரவருக்கு பூச்சட்டையும், வடை மாலையும் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும். ஈசானிய மூலையில் ஊர் எல்லைக் காளியாக குறுங்குடி அம்மன் கோவில் உள்ளது.

கோடையில் ஈர்க்கும் நம்பி கோடை காலங்களில் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற புகழ்பெற்ற மலை பகுதிகளுக்கு செல்லவே விருப்பம் தெரிவிப்பார்கள்.

அந்த வகையில் ஆன்மீக ரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து இந்த கோவிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

கொட்டும் அருவி நம்பி மலைக்கு வரும் பயணிகள் இரண்டு வகையான பலனை அடைகின்றனர். மலை மேல் உள்ள நம்பியாண்டவரை தரிசித்தும், அருவியில் குளித்த ஆனந்தத்தையும் பெறுகின்றனர்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தப்பகுதிகள் இருந்தாலும் தேவையற்ற கெடுபிடிகள் இல்லாத சுற்றுலாத் தலமாகவே உள்ளது.

மலையில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் மூலிகை கலந்து வருவதால் சோப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எப்படிச் செல்வது ? திருநெல்வேலி மாவட்டம், நாங்கு நேரி தாலுகா, களக்காடு ஒன்றியத்தில் அமைந்துள்ளது திருக்குறுங்குடி. இந்த ஊர் தெய்வ தலங்கள் அமைந்த இடமாக இருப்பதால்,

குறுங்குடிக்கு முன்னால் திரு சேர்த்து திருக்குறுங்குடி என்று அழைக்கப்படுகிறது. மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருக்குறுங்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

 

Previous Post

எப்படி இருந்த பழமொழிகள்

Next Post

கால் செருப்பு அறுந்து விட்டது

Next Post
கால் செருப்பு அறுந்து விட்டது

கால் செருப்பு அறுந்து விட்டது

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »