• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

திருமந்திரம்-திருமூலர்

siddharbhoomi by siddharbhoomi
November 24, 2021
in ஆன்மிகம்
0
திருமந்திரம்-திருமூலர்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

திருமந்திரம்-திருமூலர்

திருமூலர் திருமந்திரம்.. சொல்லும் உண்மைகள்..

ஒரு மனிதன் இறந்த மூன்றாவது நாளின்

தனஞ்சயன் வாயு தலை வழியாக

வெளியேறும். இதன் காரணத்தினாலே இறந்து

பல காலம் ஆண மனிதனின் உடல் உப்பத் தொடங்குகிறது.

இருக்கும் தஞ்சயன் ஒன்பது காலில்

இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்

இருக்கும் உடலில் இருத்தல் ஆகில்

இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே

பாடல்.654

தச வாயுக்காளால் உடல் அசைகிறது.

இந்த வாயுக்கள் உடலை விட்டு நீங்கினால் சவமே – திருமூலர்.

பஞ்சபூதங்களில் காற்றால்தான் இந்த

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அசைவும்

ஏற்படுகிறது.

காற்றில்லாமல் எந்த பயணமும் நிகழ்வதில்லை.

நம் உடலும் அவ்வாறே இமை மூட, இரத்ததை உறுப்புகளுக்கு செலுத்த,

உறுப்புகளை அசைக்க, இயற்கை உபாதை

இப்படி எல்லாவற்றிர்கும் அடிப்படையாய்

இருப்பது நம் உடம்பில் உள்ள 10 வாயுக்கள்தாம்.

*தனஞ்சயன்* (வீங்கற் காற்று) என்னும் வாயு

மற்ற 9 வாயுக்கள் (உயிர் காற்று (பிராணன்),

மலக்காற்று (அபானன்), தொழில் காற்று.

(வியானன்), ஒலிக்காற்று (உதானன்),

நிரவுக்காற்று( சமானன்), தும்மல் காற்று

(நாகன்), விழிக்காற்று (கூர்மன்), கொட்டாவிக்

காற்று (கிருகரன்), இமைக் காற்று

(தேவதத்தன்)) உடன் கலந்தே இருக்கும். அஃது

223ஆவது புவணமான அகந்தை என்ற

மண்டலத்தில் பொருந்தியிருக்கும். இந்த வாயு

இல்லாது போனால் உடல் வீங்கி வெடித்து

போகும்.

மேல் சொன்ன வாயுக்களை எந்த எந்த வாயு

உடலை விட்டு அறவே நீங்குகிறது

மனிதனுக்கு அந்த அந்த உருப்பு வேலை

செய்வதில்லை.

உதாரணத்திற்கு முடக்கு

வாதம்.

இதை இன்றைய விஞ்ஞானிகளால்

மறுக்க முடியுமா?

  1. இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது *சுழிமுனை.*
  2. இடது மூக்கு துவாரம் வரை – *சூரியகலை.*
  3. வலது மூக்கின் வரை – *சந்திரக் கலை.*
  4. வலது கண்ணின் வரை – *புருடன்.*
  5. இடது கண்ணின் வரை – *காந்தாரி.*
  6. வலது காது வரை – *அத்தி.*
  7. இடது காது வரை – *அலம்புடை.*
  8. மூலாதலத்திலிருந்து – *சங்கினி.*
  9. உள் நாக்கு முடியும் வரை – *சிங்குவை.*
  10. அபான வரை – *குரு.*

*தச வாயுக்களின் சுற்று.*

*****************************

  1. உயிர் காற்று. (பிராணன்)
  2. மலக்காற்று. (அபானன்)
  3. தொழில் காற்று. (வியானன்)
  4. ஒலிக்காற்று. (உதானன்)
  5. நிரவுக்காற்று.( சமானன்)
  6. தும்மல் காற்று. (நாகன்)
  7. விழிக்காற்று. (கூர்மன்)
  8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
  9. இமைக் காற்று. (தேவதத்தன்)
  10. வீங்கற் காற்று. ( தனசெயன்)

தசவாயுக்கள் ( தசரதன் )

**************************

*1. பிராணவாயு:-*

நெஞ்சுக்குழியில் இருந்து மேல் நோக்கிச் சஞ்சரித்து, பரி, தாகத்தை ஏற்படுத்தி உணவை ஜீரணம் செய்து, செரிமானத்திற்கு மூல காரணமாக விளங்குகிறது

*2. அபானன் 😘

உடற்கழிவுகளான மல, சலம் சுக்கிலம், சுரோணிதம், ஆகியவற்றை வெளியேற்றுவது. அதாவது உடலின் தள்ளல் என்ற தத்து வத்தின் அதிபதியாக

விளங்கும்.

*3. வியானன் 😘

உடல் முழுவதும் வியாப்பித்து தொடு உணர்ச்சியை கிரகிப்பதோடு, ஜீரணமான உணவை இரசம் வேறாகவும் சக்கை வேறாகவும் பிரிக்கும் பணியைச் செய்வது.

*4. உதாணன் : -*

தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச்செய்து, ஏப்பம், வரச்செய்வது குறட்டை வரச்செய்வது உறங்கும் போது ஐம்புலன்களையும் இருளில் ஆழ்த்தி உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் பின்பு விழிப்பு நிலையில் அதனதன் இயல்பிற்கேற்ப மறுபடியும் இயங்கச் செய்வதும் ஆகும்.

*5. சமானன் :-

தொப்புள் பகுதியிலிருந்து கொண்டு உதானன் அனுப்பும் உணவின் சாரத்தை யெல்லாம் எல்லா உறுப்புகளுக்கும், அதனதன் இயல்பிற்கேற்ப பகிர்ந்து அளிப்பது.

*6. நாகன் :-

இது தொண்டையிலிருந்து கொண்டு வாந்தி, முக்கல், திமிர்விடுதல், ஆகியவைகளைச் செய்வதோடு கண்களுக்குப் பார்வையை கொடுப்பது.

*7. கூர்மன் :-

கண்இமைகளை இயக்குதல், உடல் சிலிர்த்தல் சிரிப்பு போன்ற

வேலைகளைச் செய்வது.

*8. கிருகரன் :-

தும்மல், அழுகை போன்ற உணர்ச்சிகளின் அதிபதியாக செயல்படுவது.

*9. தேவதத்தன் :-

மார்பில் சஞ்சரித்து கபத்தைக் கட்டி கொட்டாவி விக்கலை உண்டாக்குவது.

*10. தனஞ் செயன் :-

மேற்சொன்ன ஒன்பது வாயுக்களிலும் பரவியிருந்து விரவிக் கொண்டு நொடிக்கு 224 அதிர்வு அலைகளை உண்டாக்கி ஒவ்வொரு வாயுவையும்

அதனதன் தொழிலை செய்யவைப்ப தோடு 72,000 நாடி நரம்புகளையும் இயக்குவது, கர்ப்ப காலத்தில் இவ்வாயு குறையுமானால் பிறக்கும் குழந்தை கூன், குருடு, செவிடு, பேடு, முடம் மற்றும் தொழுநோய்- இவைகளை ஏற்படுத்தும். கர்பத்திலுள்ள கருவை வெளியே தள்ளுவதும் இவ்வாயுவின் பணியே.

மனிதன் இறக்கும் போது ஒன்று முதல் ஒன்பது வாயுவும் ஒன்றன்பின் ஒன்றாக உடல் விட்டு வெளியேறும்.

ஆனால் தனஞ்செயன் மட்டும் உடலில் தங்கி இருந்து வினாடிக்கு 224 மின் அதிர்வை உண்டாக்கி கொண்டே இருக்கும் அவற்றை கிரகிக்க இதர வாயுக்கள் இல்லாத படியால் இந்த மின் அதிர்வுகள் உள் உறுப்புகளை நேரடியாகத் தாக்கி வீங்கச் செய்யும்.

இறுதியில் வயிறு வெடித்து பின்னே தனஞ்செயன் வெளியேறிச் செல்லும் என திருமந்திரத்தின் பாடல்களான 653, 656, 863 இவைகள் தெரிவிக்கின்றன.

*பிராணன் -* மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு

வழியாக மூச்சு விடல், பூச உதவமு

குரல்வளையில் உள்ளது. கை,கால்களை

வேலை செய்ய பெரு விரல் உள்ளது.

*அபானன் -* சுவாதிட்டானத்தில் இருந்து

வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும்,

ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க

வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம

வேகத்தை உண்டு பண்ணும்.

*வியானன் -* தோளிலிருந்து எல்லா நரம்பிலும்

அசையும் அசையாபொருளில்

உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை

அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து

உடலைக்காக்கும்.

*உதானன் -* உணவின் சாரத்தை கொண்டு

செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும்.

மேல் நோக்கி இயங்கும் வாயு.

*சமானன் -* நாபியிலிருந்து கால் வரை பரவும்

வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும்,

உண்ட உணவு செரித்தவுடன் எல்லா

இடங்களுக்கும் அனுப்புகிறது.

*நாகன் -* அறிவை வளர்க்கும், கண்களை

திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட

வேலை செய்யும். வாந்தி எடுத்தால்

துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

*கூர்மன் -* மனதில் கிளம்பி, கண் இமை,

கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட,

கண்ணீர் வர வேலை செய்யும்.

*கிருகரன் -* நாக்கில் கசிவு, நாசி கசிவு

உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல்

புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

*தேவதத்தன் -* சோம்பல், தூங்கி எழுகையில்

அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல்,

சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

*தனஞ்செயன் -* மூக்கிலிருந்து உடல் முழுதும்

வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை

இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம்

நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

*ஆறு ஆதாரத்தின் பங்கு.*

*******************************

  1. மூலாதாரம்.
  2. சுவாதிட்டானம்.
  3. மணிப்பூரகம்.
  4. அனாகதம்.
  5. விசுத்தி.
  6. ஆக்கினை.

(1) மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில்

உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை

என்கின்றோம்.

(2) ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி

கழுத்தில் உள்ளது.

(3) வாயு தத்துவத்தில் அநாவிரதம் மார்பு

பகுதியில் உள்ளது.

(4) அக்கினி தத்துவத்தில் மணிபூரகம்

வயிற்று பக்கத்தில் உள்ளது.

(5) நீர் தத்திவத்தில் அவாதித்தனம்

குறிபகுதியில் உள்ளது.

(6) பூமிதத்துவத்தில் மூலாதாரம் குத

பகுதியில் உள்ளது

*பிராணன்*

**************

பிறந்த உடன் துவக்கிய சுவாசம் இறுதி

மூச்சு எனப்படும் மரணம் வரை அவனை வாழ

வைக்கிறது. பிராண வாயுக்களோடு (பிராணன்,

அபானன், வியானன், உதானன், சமானன்) என்று

பெயர்ப்பும் பிரதான ஐந்து வாயுக்களுடன்

இதர உப வாயுக்களான (நாகன், கூர்மன்,

கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் ) என்ற

ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள்

எனப்படும் பத்து வாயுக்களும்

இணைந்திருப்பினும் செயல்படாமல் இருந்தன

எனக்கூறலாம்.

கருவீட்டினின்றும் பெருவீடு என்ற இந்த

பிரபஞ்சத்தின் பிடிக்கு வந்த பிறகே இந்த பத்து

வாயுக்களும் தத்தம் பணியினைத் துவங்கியது

என்பதோடு உடலின் பல்வேறு பகுதிகளில்

பிராணனோடு இணைந்தும், தனித்தும்

பிராணனின் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. தச

வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன்

ஏனைய வாயுக்களுக்கு எல்லாம்

தலைமையாக இருந்து அனைத்து

உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த

ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை

அளித்து வருகிறது.

*அபானன்*

**************

அபான வாயு கீழ் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்

டம்)கொண்டது. “மலக்காற்று” எனவும்

இதற்குப் பெயர் உண்டு.

*வியானன்*

**************

இதன் உற்பத்தி மூலத்தானமாக மண்ணீரல்

விளக்குகிறது. உணர்வு நரம்புகள் (கட்டளை

நரம்புகள்) மற்றும் உணர்வுகளை

எற்றிசெல்லுதல் ,செயல் படுத்துதல்

நரம்புகளாகவும் மற்றும் இரு நரம்புகளுக்கு

இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை

கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின்

கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும்

(இயங்கும்) வகையில் தொழில் புரிய

வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் .

இதனை தொழிற்காற்றென அழைப்பர்.

*உதானன்*

*************

மூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள

முன் தொண்டை, மூக்கு ,குரல் வளை,

மூச்சுக்குழல் , மூச்சின் இதர கிளை குழல்கள்

ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி

எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால்

குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை

உதானன் என்ற ஒலிக்காற்று ஆகும். மேலும்

குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு

பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான

மடிப்புகள் இடைவெளியுடன்

அமையப்பெற்றுள்ளன . இம்மடிப்புகள் குரல்

நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே

உதானன் செல்கிறபோது குரல் நாண்கள்

அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன.

*சமானன்.*

*************

உடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள

திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய

உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும்

காரணியாய் உள்ளதும் பல்வேறு வகை புரதம்

மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து

பிரித்தல் , உணவை செரித்தல் , அவ்விதம்

செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல்

முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச்

செய்யும் வாயுவே சமானன் ஆகும் . இதனை

நிரவுக்காற்று(பரப்புதல்,சேர்ப்பித்தல்)எனப்

பெயர்பெறுகிறது.

*நாகன்*

**********

பிராணனின் தலைமை வாயிலான மூக்கு

மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின்

அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று

ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று ,

ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும்

வகையில் மூளையின் அதிவேக

கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம்

மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு

வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற

நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும்.

இதனை “தும்மற்காற்று” எனக்கூறுவர்.

மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின்

நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது

உள்பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின்

சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக

இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல்

மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு

உதவிபுரிகிறது.

*கூர்மன்*

***********

உள்விழி நீரை சரியான அழுத்தத்தில்

வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை

புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு

ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும்

காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை

வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின்

பணியாகும். குறிப்பு – விழிநீரில் சோடியம்

குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற

முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி

நாசினிகளை வெளியேற்றி விழிகளை

பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.

*கிருகரன்*

*************

மூளை தனக்கு ஒய்வு பெற எண்ணும்போதும்

மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை

இரண்டையும் குறைக்க முயலும்போது

அந்நேரம் உறக்கம் வருவதற்கு “கொட்டாவி”

என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன்

ஆகும். அவ்வேளை நுரையீரல் உள்ளே

உட்புகும் வெளியேறும் பிராண வாயு

குறைவினால் உடலின் அனைத்து

பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம் திடீரெனக்

குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல்

நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும்

தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண

வாயு பற்றாக் குறையினைச் சரிப்படுத்தும்

நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும்

செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின்

பணி ஆகும்.

*தேவதத்தன்*

****************

விழி உலராயிருக்கவும் , விழியை

பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி)

என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன்

ஆகும். மேலும் நாம் உறங்கும் சமயம்

தவிர்த்து விழித்திருக்கும் முழுதும்

இடைவிடாது செயாலற்றும் வாயுவை

தேவதத்தன் என்பர்.

*தனஞ்செயன்*

******************

மனித உடல் இறந்து பட்டு வீழ்ந்தபின் ஏனைய

ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும்

நின்று விடும். அத்துடன் அவை யாவும்

உடலை விட்டு வெளியேறிவிடும். ஆனால்

தனஞ்செயன் மரித்த உடலில்

இயங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொரு செல்

(நுண் திசுக்கள்) இயக்கமறச்செய்து

விடுகிறது. அவ்வமயம் தனஞ்செயன் நுண்

கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து

வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல்

உடல்தோல் மற்றும் தசைகளை விறைக்கச்

செய்வதும் உடலை வீங்க வைத்தும் பின்

உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது.

இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.

இவ்விதமாய் தசவாயுக்களும் நம் உடலில்

பல்வேறு செயல்களும் தன்னிச்சையாக

செயல்படுகிறது.

உயிர்க்காற்று (பிராண

வாயு) யின்றி ஏனைய ஒன்பது காற்றுகளும்

செயல்படமுடியாது.

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து முதுமை வரை அவற்றின் வளர்ச்சி அனைத்தும்கருவிலே நிர்ணயிக்கப்படுகிறது. முதுமையில் நோய் உண்டாவதற்கும் கருவின்பாதிப்புதான் முக்கிய காரணமாகிறது. இதனால் தாயின்ஆரோக்கியமே குழந்தையின் ஆரோக்கியமாகும்.

தாயின் மனநிலையையும், உடல் நிலையையும் பொறுத்தேகுழந்தையின் நலம் நன்றாக இருக்குமென்று மருத்துவ உலகம் கூறுகிறது.முதலில் கருவுற்ற பெண்ணின் கருப்பை வலுவான நிலையில் இருந்தால்தான் குழந்தை சீராக வளரும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மையாகும்.

கருவுற்ற பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும், எத்தகைய முறைகளைகடைப்பிடிக்க வேண்டும்என்பதையும், கருவை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்என்பதையும் சித்தர்கள் தெளிவாக வரையறுத்துள்ளனர்.

இதுபோல் ஒரு பெண்கருவுறும் முன் தன் உடலையும், மனதையும் எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்என்றும்கூறியுள்ளனர்.சித்தர்களின் கூற்றுப்படியும், வாழ்க்கை தத்துவத்தின்படியும் கணவன் மனைவிஇருவரும் எந்நிலையில் உறவு கொள்ள வேண்டும், எவ்வாறு உடலைப் பராமரித்துபாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கணவனும் மனைவியும் உறவு கொள்ளும்முன் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கவேண்டும். சிறுநீரையும், மலத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு உறவுகொள்வதால் உண்டாகும் கரு, பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குறையுள்ளகுழந்தை பிறப்பதற்கான பல காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் இருந்தால் உடல் அதிகம் பாதித்து நோய்கள் அனைத்தும் தொற்றிக்கொள்ள

முக்கிய காரணமாகிறது.

இதைத்தான் அன்றே சித்தர்கள்,

*ஓதுகின்ற மலக்கட்டை ஒழிய வைத்தால்உடலிலுள்ள உபாதையெல்லாம் ஒடுங்கிப் போகும்*

*தாது உற்ற சிறுநீரை தெளிய வைத்தால் சடத்திலுள்ள வேகமெல்லாம் தணிந்து போகும்*

இந்த பாடலிலிருந்து மலச்சிக்கல்தான்அனைத்து நோய்களுக்கும் ஆரம்பம் என்பது தெரியவரும்.மலச்சிக்கல் இருந்தால் மனம் விகாரமடைந்து மனச் சிக்கலை உண்டாக்கிவிடும். இதைத்தான் சித்தர்கள் மலச்சிக்கலும், மனச்சிக்கலும் ஆதி நோய்கள் என்றனர்.

மனச்சிக்கல், மலச்சிக்கல் இருக்கும்போது கணவனும் மனைவியும் உறவுகொண்டால் குறையுள்ள குழந்தை உருவாகும்.பாலவாதம் என்ற இளம்பிள்ளை வாதம், பார்வைக் குறைபாடு, காது கேளாமை, கை கால்சூம்பி காணப்படுதல் மற்றும் இன்னும் பல நோய்களை உண்டாக்கும்.இது முதுமையில் அதிகம் பாதிப்புகளை உண்டாக்கும். மனச்சிக்கலையும், மலச்சிக்கலையும்போக்கி ஒரு பெண் தாய்மையடையும் போது உருவாகும் கருவானது ஆரோக்கிய குழந்தையாக மாறும்.தாய்மை அடைந்த பின்பும் அந்தப் பெண்ணுக்கு மனச்சிக்கல், மலச்சிக்கல்இருக்கக்கூடாது.

இதனால்தான் கருவுற்ற பெண்ணை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள பல சடங்குகளை நம் முன்னோர்கள்வைத்திருப்பதை அறிந்தோம்.கருவுற்ற தாய்க்கு மேல்கண்ட இரண்டு சிக்கல்கள் இருந்தால் உடலையும்,கருவையும் பாதுகாக்கும் தச வாயுக்கள் (10 வாயுக்கள்) சீற்றமடைந்துசீர்கெட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், தனஞ்செயன், கிரிகரன், தேவதத்தன்.உடலை சீராக பராமரித்து பாதுகாப்பதும், அதுபோல் கருவுற்ற பெண்ணுக்கு இந்ததசவாயுக்களின் செயல்பாடு நன்கு இருந்தால்தான் கருவின் வளர்ச்சியும் சீராகஇருக்கும்.தாய்க்கு தசவாயுக்களின் செயல்பாடு சீராக அமையாமல் சீற்றம் மிகுந்துகாணப்பட்டால் அது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்க ஆரம்பிக்கும்.இதனால் பாலவாதம் என்னும் இளம்பிள்ளைவாதம்கொண்ட குழந்தை பிறக்கும்.

இதைத்தான் அகத்தியர்சொல்லிய

*பாலர்வாதம் தொடர்ந்திடும் விவரம்தான்மெல்லிய கருவில் வந்து விரும்பிய தசவாயுக்கள்தல்லிய விமலம்தானும் நாரவும் சேருமாகில்தல்லிய குணங்கள் விட்டு தளர்ந்திடும்*

நரம்புதானேபத்து விதமான வாயுக்கள் நன்கு சீராக செயல்பட்டால்தான் உடலும், மனமும்புத்துணர்வுடன் காணப்படும்.

திருச்சிற்றம்பலம்

Previous Post

வாராஹி அம்மன்.

Next Post

தனித்து இருத்தல்தான்

Next Post
தனித்து இருத்தல்தான்

தனித்து இருத்தல்தான்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »