இந்த ஒரு இலை கிடைத்தால் போதும்.
இந்த ஒரு இலை கிடைத்தால் போதும். நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து சந்தோஷமாக வாழ முடியும்.*
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பிரச்சனையை அவர்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். பிரச்சனை என்ற
ஒன்று இல்லாத நபர் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. ஏன் கடவுளுக்கு கூட சில நேரங்களில் பிரச்சனைகள்
என்பது ஏற்பட்டிருக்கிறது அல்லவா.
ஒரு பிரச்சனை வந்து விட்டது என்றால் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நாம் பல முயற்சிகளும் செய்வோம்.
அப்படி நாம் முயற்சிகள் செய்தும் அந்த முயற்சியில் நம்மால் வெற்றி அடைய முடியவில்லை என்றாலோ அல்லது
அந்த பிரச்சனை மேலும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.
ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சனை என்று நாம் எதை சொல்லலாம். உடல்நலம் குறைபாடு, பண பிரச்சனை,
கடன் பிரச்சனை, சொத்து பிரச்சனை, வீடு பிரச்சனை, தொழில் பிரச்சனை, முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, நகை
கடன் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவற்றில் எதுவாக இருந்தாலும் இந்த இலையில் நாம் எழுதி வைத்து
இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த பிரச்சினை தீருவதற்கான வழிகள் நமக்கு கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும்தான் செய்ய வேண்டும். மேலும் செய்யக்கூடிய நேரமானது மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் இலை எருக்கன் இலை ஆகும். அதிலும் குறிப்பாக வெள்ளை எருக்கன் இலை கிடைத்தால் மிகவும் விசேஷம். அப்படி கிடைக்காத பட்சத்தில் சாதாரண எருக்கன் இலையை கூட இதற்கு பயன்படுத்தலாம்.
எருக்கன் இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு நம்முடைய பிரச்சனை என்ன என்பதை அந்த இலையில் சிவப்பு நிற மையை கொண்டு எழுத வேண்டும். ஒரு பிரச்சினையை மட்டும் தான் எழுத வேண்டும். எழுதிய இந்த இலையை சாம்பிராணி கரண்டியில் வைத்து அந்த இலையின் மேல் வேப்ப எண்ணெய் இரண்டு சொட்டு ஊற்ற வேண்டும். வேப்ப எண்ணெய் இல்லாதவர்கள் நல்லெண்ணையில் வேப்ப இலை பொடியை கலந்தும் விடலாம்.
பிறகு அதன் மேல் ஒரு கற்பூரத்தை வைக்க வேண்டும். இப்பொழுது இந்த சாம்பிராணி கரண்டியை வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து வைத்து கற்பூரத்தை ஏற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை வீட்டிற்குள் செய்யக் கூடாது. கற்பூரம் எறிய ஆரம்பித்து முடியும் வரை அந்த கற்பூரத்தையே நாம் பார்த்து நாம் எழுதிய பிரச்சினையை மனதிற்குள் கூற வேண்டும்.
இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை நாம் செய்யும் பொழுது அதற்குரிய வழி நமக்கு கிடைக்கும்.










