மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும்
மனதை ஒருமுகப்படுத்தவோ , அல்லது
மனதை அடக்கவோ சக்தி இல்லாதவர்கள் மூச்சை கவனிக்கலாம் . ஏனெனில் மூச்சும் , மனதும் ஒரே ஸ்தானத்தில் உற்பத்தியாகின்றன.
மூச்சு குதிரை என்றால் , மனம் அதன் மீது சவாரி செய்பவன் .
குதிரை கட்டுப்பட்டோடினால் ” சவாரி ”
செய்பவனுக்கு அமைதியாக இருக்கும் .
மூச்சின் இயக்கத்தை மனதால் கவனிப்பதும் பிராணாயாமமே . மூச்சை கவனிப்பதால் அது ஒழுங்காகிறது . மனதிற்கும் ஒரு வேலை கொடுப்பதாகிறது
மூச்சடக்கத்தால் மனவடக்கமும்
மனவடக்கத்தால் மூச்சடக்கமும் இவ்வாறு சித்திக்கின்றன . நாட்கள் செல்லச் செல்ல இந்த மூச்சை கவனிக்கும் பழக்கம் எண்ணங்கள்
இல்லாமல் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும் .











