🌈#பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணியப்பிள்ளை)🌈
🌈” பிறந்த நாள் நவம்பர், 5 ( 1889 )
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌈#எம்.எல்.பிள்ளை என்றும் கா. சு.பிள்ளை என்றும் அறியப்பட்டவர்
🌈#நெல்லைச்சீமை‘ தமிழுக்களித்த நற்றமிழ்வாணர்
கா.சு. பிள்ளை.
🌈#இந்திய அளவில் நடந்த சட்ட நூல் ஆய்வுப்
போட்டியில் வெற்றி பெற்று
#தாகூர்சட்டவிரிவுரையாளர்
பட்டத்தை வென்று 10 ஆயிரம்
வெண்பொற்காசுகள் பரிசாகவும் பெற்றவர்.
🌈#இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு,
திருக்குறள் பொழிப்புரை ஆகியவை,
பிற்கால வரலாற்று நூல்களும்,
திருக்குறள் உரைகளும்
எழுதியவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன.
🌈#தம் இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று
வறுமையில் வாடிய இவரை செட்டிநாட்டரசர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணியமர்த்தி ஆதரித்தார்.
🌈#தூயசைவர். ஆனால் தீவிரமான
முற்போக்காளர் .
🌈#இவர் நினைவாக ” பல்கலைப்புலவர்
தமிழ்க் கா.சு. நூறு” என்ற நூலில்
100 அறிஞர்கள் இவர் புகழ் பாடும், கட்டுரைகள், கவிதைகள் படைத்துள்ளனர்.
🌈#அதில் முதற்கட்டுரை #பேரறிஞர் அண்ணா
எழுதியது. அதில் ஒரு சிறு பகுதி இது
🌈“சைவமாம் கடலில் நீந்திச் செல்லும்போது
எதிரே வந்த சில சீர்திருத்தமாம் பொற்றுரும்புகளை எம்மிடம் வீசி எறிந்துவிட்டு மீண்டும்
அச்சைவக் கடலிலேயே நீந்திச்
சென்றவரைச் சைவ உலகம்
கைவிட்டுவிட்டதென்றால் அது பெரிதும்
வருந்தத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும் “
(காண்க: மேலது நூல்/ பக்கம் – 2)
🌈#காசு.பிள்ளை தமிழ் நாட்டில், தமிழராக
சைவக் குடும்பத்தில் பிறந்ததால் அவருடைய
அருமை பெருமை பாராட்டப் படவில்லை
என்று அவரின் அன்னையார்
ஆதங்கப்பட்டிருக்கிறார்” என்று
மேலது நூலைத் தொகுத்த
மீ.சு.இளமுருகு பொற் செல்வி
குறிப்பிட்டுள்ளார்
🌈#குடத்துள் விளக்காக இருந்த இவர்
ஒளி அணைந்த நாள் 30-4-1945.










