“கர்ணா நீ கற்றது வித்தையல்ல வேதம்”
கர்ணன் பிறப்பால் சத்திரியன்..
“வீரத்திற்கு குறைவில்லை”
ஆனாலும் குரு வேண்டுமே?
துரோணாச்சாரியார் மறுத்துவிட
கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலையில் செல்கிறான் கர்ணன்
மாணவர்களின் திறமையை சோதிக்க வானில் பறக்கும் ஒரு பறவையை குறி பார்த்து வீழ்த்தச் சொல்கிறார் கிருபாச்சார்யார் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய் விடுகிறான் அர்ஜுனன்
இப்போது கர்ணனின் முறை..
அம்பை நாணில் பூட்டியாயிற்று..
ஒரு கணம் வானில் பறவையை குறி பார்த்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை..
அம்பையும் வில்லையும் கீழே வைத்துவிட்டான்
மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது
காரணத்தை கர்ணனிடமே கேட்டார்
குருவே இது அதிகாலை நேரம்
இந்நேரம் ஒரு பறவை வானில் பறக்கிறது என்றால்
அது தன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு செல்கிறது என அர்த்தம்
இப்போது திறமைக்காக அதை கொன்றுவிட்டால் நான் வீரனாவேன் ஆனால் அதன் குஞ்சுகள்
அனாதையாகிவிடும்
எனவே நான் அதை கொல்லமாட்டேன்
கலங்கி போன குரு கர்ணனிடம்
“கர்ணா நீ கற்றது வித்தையல்ல வேதம்”
பணத்தாலும் பதவியாலும் பலத்தாலும் நாம் உயர்ந்தவராக இருக்கலாம்
ஆனால் அதை நம்மைவிட பலம் குறைந்தவர்களிடம் காட்டுவது வீரமும்அல்ல
“சத்ரிய தர்மமும் அல்ல” 🙏











