வேடசந்தூரில் மனித வடிவ காட்சி தரும் நரசிம்மர்
திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருள்பாலிக்கிறார்.
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர். பக்தரின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்க முகம் இல்லாமல், மனித முகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர்.
பத்ம விமானத்தின் கீழ் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் அபயவரத முத்திரைகள் காட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள ஒரு தூணில் புடைப்புச்சிற்பமாக சிவலிங்கம் உள்ளது. குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.
இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒளியும். உடல்நலம் உண்டாகும்.
சிவயநம











