நலமாக வளமாக அருளோடு பொருளோடு வாழ
ஸ்ரீ அன்னையின் திருக்கண்களே சரணம்
ஆன்மாவை பிரதிபலிக்கும் அன்னையின் இத்திருக்கண்களே
எத்தனையோ விஷயங்களை சாதித்திருக்கின்றது.
உங்கள் {நம்} ஆன்மாவுடன் தொடர்பு கொள்வது அன்னையின்
திருக்கண்களே ! அந்த கண்களிலிருந்து ஒளிக்கீற்று {Rays of Light}
வெளிப்பட்டு ஆன்மாவுடன் {Soul} ஒன்றுபடுகிறது. அன்னையின் திருக்கண்களை நேருக்கு நேர் உற்று நோக்க முடிந்தால், அசைவின்றி,
சிந்தனைகளின்றி, ஒருமுனைப்பட முடிந்தால் அவருடைய
விழிப்புணர்வில் ஒன்றுபட முடிந்தால், அந்த பார்வையின்
தீட்ஷண்யத்திலிருந்து வெளிப்படும் சக்தியில் ஐக்கியப்பட முடிந்தால்
அன்னையால் நமக்கு நிறையவே செய்ய முடியும். அவர் நம்முடன்
ஐக்கியப்படுவோர் {Unification} அன்னையின் திருக்கண்களை உற்று
நோக்கி, அன்னைக்காகத் தன்னை திறந்து வைக்க ஒருவர் தயாராகும்போது, அன்னையிடம் பணிவுடன் நம்பிக்கையோடு
இவ்வாறு சொல்ல வேண்டும். “Mother knows everything, I don’t have to
worry, Mother will arrange everything ‘.
“அன்னைக்கு எல்லாம் தெரியும் ” நான் எதைப்பற்றியும்
கவலைப்படலாகாது . எல்லாவற்றையும் ‘அன்னையே பார்த்துகொள்வார்’ என்று சொல்லி எந்த சிந்தனையும் இன்றி
இருந்தால் அன்னையே நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துகொள்வார்.
இப்படிதான் தெய்வீக சக்தி உங்களுடைய {நம்முடைய} மன
உடல் குறுக்கீடுகளின்றி நமக்காக எல்லாவற்றையும் செய்து தருகிறது.
அன்னையின் கண்கள் வெறும் திருஷ்டிக் கண்கள் அல்ல.இப்பூவுலகையே சிருஷ்டிக்கும், சிருஷ்டிக் கண்கள் அவை.
“அன்னை எனக்கு பிரச்சனைகள் தீர வழி காட்டட்டும்” என்று
அன்னையிடம் பொறுப்பை விட்டு விட தீய சக்திகள் விலகி நின்று
பிரச்சினைகளுக்கு ஓர் சுமுகமான தீர்வு வரும்.











