முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருக்க மாட்டார்களா? அப்புறம் இந்த நீத்தார் வழிபாடு எதற்கு?அது அவர்களுக்கு எப்படி பயன் தரும்?
இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
1. அவர்கள் மறுபிறவிகள் எடுத்தாலும், அல்லது முக்தியை அடைந்தாலும், அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும், நம் பித்ரு பூஜைகள் ஏதோ ஒரு வகையில், பித்ரு தேவதைகளின் மூலம், அவர்களைச் சென்ற டைகின்றன. மறு பிறவி பெற்ற பின்னும் அது அவர்களுக்கு பயன்படுகிறது.
2. இந்த பூஜையின் பலன் அவர்களை சென்றடையவில்லை என்றாலும், அவர் களை நினைத்துச் செய்யும் நன்றி உணர்வால், நமக்கு நன்மையைத் தரு கின்றன. நமது முன்னோர்களில் யார் யார் பிறவா நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என ஆன்றோர்கள், ரிஷிகள் வலியுறுத்தியிருக் கிறார்கள்.
நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் பித்ருக்கள் திருப்தியும், மன நிறைவும், மகிழ்ச்சியும் அடை கிறார்கள். அவர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான கஷ்டங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது. ஆதலால்தான், பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என் பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்று பெரியவர்கள் திருப்பித் திரும்பிச் சொல்கிறார்கள்.











