“ஊருஞ் சதமல்ல
உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல
பெண்டீர் சதமல்ல
பிள்ளைகளும், சீருஞ் சதமல்ல
செல்வஞ் சதமல்ல
தேசத்திலேயாருஞ் சதமல்ல
“நின்தாள் சதங் கச்சியேகம்பனே”
🤘 ~ பட்டினத்தார்
༺🌷༻
🌿சதம் என்றால் நிலையானது
நிரந்தரமானது என்று பொருள்.
ஊரும் சதம் அல்ல –
எனக்கு சொந்த ஊரு திருவாரூரு அப்படின்பாய்ங்க
என்னமோ இதை அவரு
காசு போட்டு வாங்கின மாதிரி
அங்க பொறந்து வளர்ந்து இருப்பாரு
மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வீடு இருக்கும்
கேட்டா அந்த ஊரே சொந்த ஊரு அப்படின்னு சொல்ல
வேண்டியது.
༺🌷༻
உற்றார் சதம் அல்ல –
அவனவன் பொண்டாட்டி புள்ளை, வேலை வெட்டின்னு அலைஞ்சுகிட்டு கிடக்கான்
நம்மள பார்க்க அவனுக்கு எங்க நேரம் இருக்கு…???
அப்போ அதுவும் நிரந்தரம் கிடையாது
உற்று பெற்ற பேரும் சதம் அல்ல –
பேரும் புகழும் நிரந்தரம் இல்லை
பேரும் புகழும் ஒரே நாளில் போய் விடலாம்
அவனாய்யா இப்படி செஞ்சான்..???
அடப்பாவி நல்லவன்னு நினைச்சேனே என்று சொல்லும் படி ஆகிவிடலாம்
༺🌷༻
பெண்டீர் சதம் அல்ல –
“கொட்டி முழக்கி அழுதிடுவார்
மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ கச்சியேகம்பனே” என்பார் பட்டினத்தார்
பிள்ளைகளும் சதம் அல்ல –
படிச்சு முடிஞ்சு, மகரயாழ் கல்யாணம் ஆனவுடன்
பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை பார்க்க போய் விடுவார்கள்.
நம்மை முதியோர் இல்லத்துக்கு விரட்டிவிட்டுவிட்டு
༺🌷༻
சீரும் சதம் அல்ல –
சொத்து பத்து அதுவும் நிரந்தரம் அல்ல.
செல்வம் சதம் அல்ல –
செல்வம் என்றாலே “செல்வோம்” என்று தானே அர்த்தம்.
நேற்று இருந்தது, நாளை போகும்
அதுவும் நிரந்தரம் இல்லை.
༺🌷༻
தேசத்திலே யாரும் சதம் அல்ல –
நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், அண்டை அயலார் யாரும் சதம் அல்ல.
பின்ன எது தான் நிரந்தரம் என்று கேட்டால்
நின் தாள் (பாதங்கள்) சதம் –











