அதன் பயன் என்ன?
அதில் எதையெல்லாம் செய்யக்கூடாது?
ஜோதிட ரகஸ்யம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தினசரி காலண்டரில் தியாஜ்ஜியம் என்று குறிக்கப்பட்டிருக்கும் .
இதன் பயன் என்ன என்று பலருக்கு தெரியாது.
தியாஜ்ஜியம் என்றால் விலக்கப்படும் நேரம் அல்லது விஷ நேரம் என்று பொருள்.
‘த்யஜ’ என்ற ஸம்ஸ்க்ருத வினைச் சொல்லுக்கு ‘விடுதல்’ என்று பொருள்.
எல்லாவற்றையும் விட்டவரை ‘தியாகி’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லுகிறோம்.
தமிழிலும் அந்தச் சொல் எல்லோருக்கும் தெரிந்ததே.
அந்த நேரத்தில் சுப காரியம் செய்யக்கூடாது.
ஜோதிட கணக்குப்படி
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிக்கும்
60 நாழிகை கொண்டது ஒரு நாள்.
ஒவ்வொரு கிழமையிலும் குறிப்பிடத்தக்க ஒரு நேரம் தியாஜ்ஜிய காலமாக அமையும்.
அதாவது ஒன்றரை மணி நேரம் விஷ நேரமாக அமையும் .
அந்த நேரத்தில் சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.
அவை எந்த கிழமைக்கு என்னென்ன நேரம் என்பதை பார்ப்போம்.
ஞாயிறு முப்பதிரெண்டு நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .
திங்கள் ,புதன் 42 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .
செவ்வாய் ,வியாழன் 31நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .
வெள்ளி 21நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .
சனி 14 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .
காலை 6மணியிலிருந்து தமிழ்தேதிப்படி கிழமை ஆரம்பமாவதாக பொருள்
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமையை எடுத்துக் கொள்வோம்.
ஞாயிற்றுக்கிழமை முப்பத்திரண்டு நாழிகைக்கு மேல் தியாஜ்ஜிய நேரம்.
அதாவது ஒரு நாளைக்கு
60 நாளிகை.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 30 நாழிகை சென்று விட்டது.
இங்கு 32நாழிகை .
மீதமுள்ள இரண்டு நாழிகைக்கு ,ஒரு நாழிகைக்கு 24 நிமிடம்.
இரண்டு நாழிகைக்கு
48 நிமிடம்.
அதனுடன் சேர்ந்து கூட்ட
மாலை 6 மணி 48 நிமிடம் முதல், ஒன்றரை மணி நேரம் அதாவது 8.18 வரை தியாஜ்ஜிய நேரமாகும்.
இந்த காலகட்டங்களில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது .
ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன?
(Reception,birthday celebration போன்ற நிகழ்ச்சிகள்)
ஞாயிற்றுக்கிழமை மாலை தான் அனைவருக்கும் லீவு கிடைக்கும்.
விடுமுறையாக இருந்தால் தான் அனைவரும் விழாவிற்கு வருவார்கள்.
மொய் பணம் அதிகமாக கிடைக்கும் என்று தவறுதலாக ஞாயிற்றுக்கிழமையை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர்.
இது தவறு.
ஆனால் நடைமுறையில் எத்தனை பேருக்கு இது சாத்தியம் என்பது தெரியவில்லை.
இதே போல் நட்சத்திரம் மற்றும் திதி க்கும் தியாஜ்யம் உண்டு.
மேலும் மாத தியாஜ்யம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
முகூர்த்த நிர்ணயத்தில் நட்சதிர தியாஜ்யம், திதி தியாஜ்யம், வார தியாஜ்யம், லக்ன தியாஜ்யம் என பல தியாஜ்யங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
இவை எதற்கு பார்க்க வேண்டும் எனில் சில காரியங்கள் இந்த லக்ன, திதி, நட்சத்திர, வாரத்தில் செய்ய வேண்டும் என்பதே, தியாஜ்ய காலங்களில் அவற்றிக்கு உரிய சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
சித்தரை மாதத்தில் அஷ்டமி, ஏகாதசி திதியும், அசுவனி, ரோகினி நட்சதிரமும் கும்ப லக்னமும் இணைந்து வருவது.
வைகாசி மாதத்தில் துவாதசி திதியும், சித்திரை, சுவாதி, உத்தராடம் நட்சதிரங்களும், மீன லக்னமும் சேர்ந்து வருவது.
ஆனி மாதத்தில் திரயோதசி திதியும் புனர்பூச நட்சதிரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது.
ஆடி மாதத்தில் ஷஷ்டி திதியும், பூரம், அவிட்டம் நட்சதிரங்களும், மிதுன லக்னமும் சேர்ந்து வருவது.
ஆவணி மாதத்தில் பூராட நட்சதிரமும், மேஷ லக்னமும் சேர்ந்து வருவது.
புரட்டாசியில் ஸப்தமி திதியும், சதயம், பூரட்டாதி, ரேவதி நட்சதிரமும், கன்னி லக்னமும் சேர்ந்து வருவது.
ஐப்பசியில் நவமி திதியும், உத்திரட்டாதி நட்சதிரமும், விருட்சக லக்னமும் சேர்ந்து வருவது.
கார்த்திகை மாதத்தில் பஞ்சமி திதியும், கிருத்திகை, மிருக சீரிடம், பூசம் நட்சதிரங்களும், துலாம், மகர லக்னங்களும் சேர்ந்து வருவதும்.
மார்கழி மாதத்தில் துவிதியை, நவமி திதிகளும், விசாகம் அனுசம், பூரட்டாதி திதிகளும், லக்னம் எதுவும் இல்லை.
தையில் மாதத்தில் பிரதமை திதியும், திருவாதிரை, ஆயில்யம், அஸ்தம் நட்சதிரங்களும், கடக லக்னமும் சேர்ந்து வருவது.
மாசி மாதத்தில் தசமி, சதுர்தசி திதியும், திருவோணம், மிருக சீரிடம், மூலம் நட்சதிரங்களும், லக்னம் எதுவும் இல்லை.
பங்குனி மாதத்தில் சதுர்த்தசி திதியும், பரணி, கேட்டை நட்சதிரங்களும், சிம்ம லக்னமும் சேர்ந்து வருவது.
அந்த அந்த திதி, நட்சத்திர, லக்னக்களுக்கு கொடுக்கப்பட்ட சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும்.
உதாரணமாக புது மனைபுக ரோகிணி நட்சதிரமும், துவிதியை திதியும் ரிஷபம் லக்னமும் சுபம் என இருக்கும், ஆனால் மாத தியாஜ்யத்தில் இவை வரும் நாட்கள் இவை விலக்கப்பட வேண்டும்
என்பதே இதன் விளக்கம்.
விலக்கப்படும் நேரத்தை விலக்கினால், வாழ்வு விளக்கேற்றியது போல் விளங்கிவிடும்.










