• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தூக்கத்தில் நம்முடைய ‘நான்’ எங்கு செல்கிறது?

siddharbhoomi by siddharbhoomi
March 22, 2026
in பொது
0
தூக்கத்தில் நம்முடைய ‘நான்’ எங்கு செல்கிறது?

தூக்கத்தில் நம்முடைய 'நான்' எங்கு செல்கிறது?

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தூக்கத்தில் நம்முடைய ‘நான்’ எங்கு செல்கிறது?

நாம் தூக்கத்தில் இருக்கும்போது பிரபஞ்சம், நமது உடல் என எல்லாமே மறைந்துவிடுகின்றன . ஆனால், காலையில் விழித்ததும்

மூளை அந்த இடைவெளியை ஒரு “அலிபி” (Alibi) மூலம் மறைத்துவிடுகிறது. “நான் எப்போதும் இங்கேதான் இருந்தேன், ஆழ்ந்து

தூங்கினேன்” என்று நம்மை நம்ப வைக்கிறது,”நான் இந்த வேலை செய்பவன், எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது, இத்தனை

தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன” என்ற தகவல்கள் வந்தவுடன்தான் நமது ஆளுமை (Personality) மீண்டும் நிலைபெறுகிறது.

உண்மையில் ஒவ்வொரு காலையிலும் நேற்றைய நினைவுகளின் சிதறல்களைக் கொண்டு ஒரு புதிய நகலையே உருவாக்குகிறோம்.

ஆனால் அந்த ‘புரோகிராம்’ ஏற்றப்படுவதற்கு ஒரு விநாடி முன்னால் இருந்த அந்த ‘நான்’ யார்? அந்த நிலையில் நீங்கள் ஒரு

வெறுமை(empty)யாக மட்டுமே இருக்கிறீர்கள்.

நமது “ego” அல்லது “நான்” என்பது உயிர்வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் (Software) போன்றது. இது ஒவ்வொரு

முறை நாம் நினைவிழக்கும் போதும் (தூக்கம், மயக்கம்) அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பும் போது புதிதாக

உருவாக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சையின் போதும், மயக்க மருந்து கொடுக்கப்படும்போதும், மருத்துவர் உங்களை 10 முதல் பின்னோக்கி எண்ணச்

சொல்வார். ’10, 9, 8…’ என்று நீங்கள் எண்ணும்போதே அடுத்த நொடி நீங்கள் கண் விழிப்பது அறுவை சிகிச்சை முடிந்த அறையில்தான்.

மற்றவர்களுக்கு அங்கே மூன்று மணி நேரம் கடந்திருக்கலாம், ஆனால் உங்களைப் பொறுத்தவரை அந்த நேரம், வலி, உலகம் என

எதுவுமே இல்லை. “ஏதோ ஒரு பிரம்மாண்டமான இருள்” கூட அங்கே இல்லை, ஏனென்றால் அந்த இருளை உணரக்கூட அங்கே யாரும்

இல்லை.

​நமது மனம் மிகவும் தந்திரமானது. தான் இல்லாத ஒரு நிலையை (Absence) ஒப்புக்கொள்ள அது பயப்படுகிறது. அதனால்தான்,

காலையில் விழித்தவுடன் உடலை ஒரு நங்கூரமாகப் பிடித்துக்கொண்டு, “நான் தூங்கினேன்”, “நான் மயக்கமடைந்தேன்” என்று

கூறுகிறது. உண்மையில், அந்தப் ‘பெர்சனாலிட்டி’ (Personality) அப்போது அணைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு நபரும் தங்களுக்குரிய தனிப்பட்ட உலகத்தை (Personal reality) தங்களது மூளை மற்றும் உணர்வுகள் மூலம் உருவாக்குகிறார்கள். உங்கள் உணர்வு அணைக்கப்படும்போது, உங்கள் தனிப்பட்ட பிரபஞ்சம் சுருங்கி மறைந்துவிடுகிறது. மற்றவர்களின் உணர்வு விழித்திருப்பதால் அவர்களின் உலகம் அவர்களுக்குத் தொடர்கிறது.

​இந்தக் கண்ணோட்டத்தின்படி, பிரபஞ்சமும் நீங்களும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் . நீங்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை, இந்த உலகம் இல்லாமல் நீங்களும் இல்லை.

“நான்” என்ற இந்த அகந்தை (Ego) இல்லாவிட்டால், ஒரு உயிரியால் உணவிற்கும் விஷத்திற்கும் வித்தியாசம் காண முடியாது. ஆனால், உயிரியல் ரீதியாக எது பயனுள்ளதோ, அதுவே உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரம், நிறம், உடலின் எல்லைகள் இவை அனைத்துமே உயிர்வாழ்வதற்காக மூளை நமக்குப் போதிக்கும் ஒரு “கட்டுப்படுத்தப்பட்ட மாயை”

​மூளை உருவாக்கும் இந்த “நான்” என்பது ஒரு வரைபடம் போன்றது. வரைபடம் வழிகாட்டுதலுக்குப் பயன்படுமே தவிர, அதுவே உண்மையான நிலப்பரப்பு ஆகாது. அதேபோல, உங்கள் உடல் அணுக்கள் மாறினாலும், நினைவுகள் அழிந்தாலும், “நான்” மாறாமல் இருப்பதாகத் தோன்றுவது மூளை செய்யும் ஒரு புத்திசாலித்தனமான தந்திரம் மட்டுமே.

​இந்த “பயனுள்ள பிரமை” என்ற கருத்து, நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மன அழுத்தம் மற்றும் கவலைகளைக் கூட ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. அதாவது, நமது சமூக அடையாளங்கள் அனைத்தும் இந்த உயிர்வாழும் தந்திரத்தின் ஒரு நீட்சிதான்.

​​நமது உடல் ஒரு நிலையான பொருள் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது ஒரு நதி போன்றது. நதியில் நீர் மாறினாலும் நதி அப்படியே இருப்பது போல, நம் உடலில் உள்ள அணுக்கள் இடைவிடாது மாறிக் கொண்டே இருக்கின்றன.

​ஏழு ஆண்டுகளில் உங்கள் உடலில் உள்ள ஒரு அணு கூட பழையது கிடையாது. அனைத்தும் புதியவை.

​அப்படியானால், “மாறாத நீ” எங்கே இருக்கிறாய்? இந்த அணுக்களின் போக்குவரத்தில் “தொடர்ச்சியான ஒரு நபர்” என்பது வெறும் நினைவுகளால் கட்டப்பட்ட ஒரு பிம்பம் மட்டுமே.

​குழந்தைப் பருவத்தில் நமக்கு “நான்”, “உலகம்” என்ற பிரிவினை கிடையாது. ஒரு குழந்தை முதல்முறையாகக் கண்ணாடியைப் பார்க்கும்போது, அதில் தெரியும் அறையையும், ஒளியையும், தன் உடலையும் ஒரு ஒட்டுமொத்தப் பிம்பமாகவே பார்க்கிறது. பெரியவர்கள் குழந்தையின் உடலைச் சுட்டிக்காட்டி “இதுதான் நீ, இது உன் பெயர்” என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அந்த அறையையோ அல்லது சுற்றியுள்ள இடத்தையோ அவர்கள் கண்டு கொள்வதில்லை.

உளவியலாளர்கள் இதை ஒரு திருப்புமுனை என்கிறார்கள். இதன் பிறகுதான் குழந்தை தனக்கு ஒரு எல்லையை வகுத்துக் கொள்கிறது. உயிர்வாழ்வதற்காகத் தனது “அசல் முழுமையை” (Original wholeness) அது இழக்கிறது.

நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது உங்கள் உடலை மட்டும் பார்க்கிறீர்களா? இல்லை, அந்த அறை, சுவர்கள், ஜன்னல் வழி வரும் ஒளி என அனைத்தையும் சேர்த்தே பார்க்கிறீர்கள்.

​பிறந்தது முதல் இன்று வரை, உங்கள் உடலை உலகமில்லாமலோ அல்லது உலகத்தை உங்கள் உடலில்லாமலோ நீங்கள் பார்த்ததே இல்லை. இவை இரண்டும் பிரிக்க முடியாதவை.

​ஆனால், நாம் நம்மை ஒரு “சிறிய துண்டு” (Fragment) என்று நம்பி, இந்த பிரம்மாண்டமான உலகத்தைப் பார்த்து பயந்து வாழ்கிறோம்.

​இந்தக் கண்ணோட்டம், நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் “குறுகிய அடையாளத்தை” உடைத்து, ஒரு பிரம்மாண்டமான உணர்வாக நம்மைப் பார்க்கத் தூண்டுகிறது.

​நாம் நம்மை ஒரு சிறிய உடலாகவோ அல்லது மூளைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு பார்வையாளராகவோ கருதுவதை விடுத்து, ஒரு “திரையாக” (The Screen) பார்க்க வேண்டும்.

​நாம் பொதுவாக “உலகம் வெளியே இருக்கிறது, நான் அதை உள்ளிருந்து பார்க்கிறேன்” என்று நினைக்கிறோம். ஆனால், அந்த “உள்ளிருந்து பார்க்கும் நபர்” (The Observer) கூட ஒரு மனதின் செயல்பாடுதான் (Function of the mind).

​தத்துவஞானி ஆலன் வாட்ஸ் (Alan Watts) கூறியது போல, “உங்களால் உங்கள் சொந்தப் பற்களைக் கடிக்க முடியாது; கண் தன்னைத்தானே பார்க்க முடியாது”. நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ, அதுவேதான் நீங்கள். தேடுபவரும் தேடப்படும் பொருளும் ஒன்றுதான்.

​தத்துவஞானி டேவிட் ஹியூம் (David Hume) தனக்குள் உற்றுப் பார்த்தபோது, அங்கே ஒரு நிலையான “நான்” என்பதைக் காணவில்லை; மாறாக, மிக வேகமான வேகத்தில் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் தொகுப்பை மட்டுமே கண்டார்.

​இம்மானுவேல் காண்ட் , “பார்வையாளர் அனுபவங்களுக்குள் சிக்க மாட்டார், ஏனென்றால் அவர்தான் அந்த அனுபவங்கள் நிகழ்வதற்கான அடிப்படை நிபந்தனை” என்றார்.

ஒரு சினிமா ​படத்தில் ஒரு வீடு எரியலாம் அல்லது பெருமழை பெய்யலாம், ஆனால் அந்தத் திரை எரிவதுமில்லை, நனைவதுமில்லை. நீங்கள் அந்தத் திரையைப் போன்றவர். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எந்தச் சம்பவமும் உங்களை (அந்தத் வெறுமையை) காயப்படுத்தவோ அல்லது அழிக்கவோ முடியாது.

​”நீங்கள் ஒரு சிறிய துண்டு அல்ல. நீங்கள் ஒரே நேரத்தில் அந்தத் திரை, அந்த ஒளிக்கற்றை மற்றும் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் (Frame) ஆவீர்கள்.”

​எண்ணங்கள் அமைதியாகும்போதோ அல்லது “நான்” என்ற பிம்பம் மறையும்போதோ நமக்கு ஒரு பயம் வருகிறது (Fear of losing control). “நான் மறைந்துவிட்டால் என் கடன்களை யார் அடைப்பார்? நான் பைத்தியமாகி விடுவேனா?” என்று மனம் கதறுகிறது.

​ஆனால், ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கச் செல்லும்போது இந்த “நான்” என்ற பாரமான உடையைக் கழற்றி எறிந்துவிட்டுத்தான் அந்தப் பாழடைந்த அமைதிக்குள் (Potential) நுழைகிறீர்கள். அங்கே உங்களுக்கு எந்தப் பயமும் இருப்பதில்லை.

​சுருக்கமாக:

நீங்கள் காலையில் விழிக்கும்போது உங்கள் தனிப்பட்ட “உலகம்’ பிறக்கிறது. உங்கள் உடல், உங்கள் பெயர் என அனைத்தும் ஒரே நொடியில் உதிக்கின்றன. நீங்கள் இந்த மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையான சாட்சி.

​இந்த “திரை” என்ற பார்வை, நமது அன்றாடப் பிரச்சனைகளை ஒரு சினிமா காட்சியைப் போலத் தூரத்திலிருந்து பார்க்க உதவும் ஒரு கருவியாக அமைகிறது.

Previous Post

சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி – திருமூலர்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

தூக்கத்தில் நம்முடைய ‘நான்’ எங்கு செல்கிறது?

தூக்கத்தில் நம்முடைய ‘நான்’ எங்கு செல்கிறது?

March 22, 2026
சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி – திருமூலர்

சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி – திருமூலர்

March 21, 2026
பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை

பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை

March 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »