சுபிட்சம் அருளும் சுக்கிரவாரப் பிரதோஷம் – 22-03-2024
☘☘☘☘☘☘☘☘☘☘
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
22ம் தேதி சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி.
☘
சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிச்க்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை!
இந்த நாளில் சுக்கிரவாரம் என்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
☘
இந்த பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். வில்வமும் அரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் அரளி மாலையும் வழங்கி வழிபடுங்கள். பிரதோஷ வேளையில், சிவபெருமானை வணங்குவது மிகுந்த பலன்களை வழங்கவல்லது.










